www.garudavega.com

BIGG BOSS : விக்ரமனை பிடிக்காதா ? மனம் திறந்த மணிகண்டா ராஜேஷ்..! BREAKING INTERVIEW!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Bigg Boss Manikanda Rajesh On Vikraman Exclusive

Also Read | உயிரோடதான் இருக்கேன்..! வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி.. 90S ‘பாட்டுக்கு பாட்டு’ BH அப்துல் ஹமீத்

பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.

இந்நிலையில், தற்போது பிக்பாஸ் 6-வது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அதன்படி இந்நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்டா ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, (வைல்டு கார்டு எண்ட்ரியில்) மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறினார். தற்போது இந்நிகழ்ச்சி 80 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.

Bigg Boss Manikanda Rajesh On Vikraman Exclusive

இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்திகேயக பேட்டி அளித்த மணிகண்டா ராஜேஷிடம், “விக்கிரமனை உங்களுக்கு பிடிக்காதா? வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு உங்களுக்கும் விக்கிரமனுக்குமான முரண்கள் குறித்த புரிதல் இப்படியாக இருக்கிறது. அதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?” என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த மணிகண்டா ராஜேஷ், “விக்ரமனை பிடிக்காதா என்று கேட்டால் அப்படி சொல்லிவிட முடியாது. ஆனால் எனக்கும் அவருக்கும் கனெக்டிவிட்டி பிக் பாஸ் வீட்டில் குறைவாகவே இருந்தது. அதற்கு காரணம் அசிமுடன் நான் ஆரம்பத்திலேயே நண்பனாக நெருங்கி பழகி விட்டேன். மற்றவர்களிடமும் ஃப்ரண்ட்லியாக பழகினேன். ஆனால் அசிமுடன் பழகியது விக்ரமனுடனான இடைவெளிக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று எனக்கு அப்போது தோன்றியது. எனக்கு விக்ரமுக்கும் எதார்த்தமாக பேசிக் கொள்வது உள்ளிட்ட  சிறு சிறு விஷயங்கள் இருந்தது.

அதே சமயம் நாங்கள் இருவரும் அதிக அளவில் கருத்து பரிமாற்றங்களை நிகழ்த்தியதில்லை. ஆனாலும் நான் ஒரு முறை அசிமிடம் கூறினேன், பிக் பாஸ் வீட்டில் என்னதான் நான் நானாக உண்மையாக இருந்தாலும் இன்னும் பல தடைகளை உடைத்து, முழுமையான மணிகண்டனுடன் நீங்கள் வெளியே வந்த பிறகு பழகலாம் வாருங்கள் என்று கூறி இருந்தேன். ஆக, விக்ரமனை எனக்கு பிடிக்காதா என்று கேட்டால் அதற்கு சொல்லக்கூடிய பதில், எனக்கும் அவருக்குமான கனெக்ட் பிக்பாஸ் வீட்டில் குறைவாகவே இருந்தது என்பதுதான்” என்று குறிப்பிட்டார்.

Also Read | Sunny Leone : தன்னுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டபோது உருகி அழுத ரசிகை.! எமோஷனல் ஆன சன்னி லியோன்.!

BIGG BOSS : விக்ரமனை பிடிக்காதா ? மனம் திறந்த மணிகண்டா ராஜேஷ்..! BREAKING INTERVIEW! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Manikanda Rajesh On Vikraman Exclusive

People looking for online information on Bigg boss, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil 6, Manikanda Rajesh Vikraman will find this news story useful.