நடிகர் மகத் தனது காதலியான பிராய்ச்சியை கடந்த ஜனவரி 30ல் திருமணம் செய்திருந்தார். இந்த விழாவில் நடிகர் சிம்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். மகத்தின் கல்யாண ஃபோட்டோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் பிரயாச்சி மகத்துடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்து மகத் நான் சொன்னேன்ல ஒருவருட வாழ்க்கை வித்தியாசமாக இருக்கும்னு இப்போ நாம ஹவுஸ் அரெஸ்ட்ல இருக்கோம். எல்லாவற்றிற்கும் நன்றி என்று தெரிவித்தார்.
நடிகர் மகத், தல அஜித்தின் 'மங்காத்தா', விஜய்யின் 'ஜில்லா', 'சென்னை 28 பார்ட் 2', 'வந்தா ராஜாவா தான் வருவேன்' உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.
அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானார். தற்போது 'கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா' உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.