www.garudavega.com

தல தோனி ஸ்டைலில் RETIREMENT-ஐ அறிவித்த பிக்பாஸ் கவின் - குழப்பத்தில் ரசிகர்கள்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'சரவணன் மீனாட்சி' தொடரில் வேட்டையனாக கலக்கியவர் கவின். அதனைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடித்த 'நட்புனா என்னனு தெரியுமா' படம் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Bigg Boss Kavin posts retirement Video in MS Dhoni Style | தோனி ஸ்டைலில் ரிட்டயர்மென்ட் வீடியோ பகிர்ந்த பிக்பாஸ் கவின்

இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றார். தற்போது 'பிகில்' அம்ரிதாவுடன் இணைந்து அவர் 'லிஃப்ட்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கவின் பப்ஜி விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை குறித்து தோனி ஸ்டைலில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. 20:24 நேரங்களில் நான் ரிட்டயர்டு ஆகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். முதன் முதலில் இதனை பார்க்கும் ரசிகர்களுக்கு சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thanks a lot for your love and support throughout. From 20:24 hrs consider me as retired.

A post shared by Kavin M (@kavin.0431) on

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Kavin posts retirement Video in MS Dhoni Style | தோனி ஸ்டைலில் ரிட்டயர்மென்ட் வீடியோ பகிர்ந்த பிக்பாஸ் கவின்

People looking for online information on Bigg boss, Kavin, PUBG will find this news story useful.