விஜய் டிவியில் இதுவரை 5 சீசன்களாக பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதன் முதலாவது சீசனில் ஆரவ் வெற்றி பெற்றார். ஐந்தாவது சீசனில் ராஜூ வெற்றி பெற்றார்.
பொதுமக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் மிக முதன்மையான இடத்தை பிற்காலத்தில் பிடித்த ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. நடிகர் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை 5 சீசன்களாகவே தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். இடையிடையே நடிகர் சிம்பு மற்றும் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கினர்.
இதன் முதலாவது சீசனில் அறிமுகமானவர்தான் ஜூலி. முன்னதாக ஜல்லிக்கட்டு - மெரினா போராட்டத்தின் போது சமூக வலைதள பிரபலமாக அறியப்பட்டவர் ஜூலி. இவர் பிக்பாஸ் பிரபலமாக பின்னாளில் உருவெடுத்தார். இதனைத் தொடர்ந்து மாடலிங் மற்றும் திரைப்படத் துறையில் இயங்கி வந்த ஜூலி, அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார்.
இடையிடையே சில சீரியல்களிலும் தலை காட்டும் ஜூலி, தற்போது முக அழகிற்காக ஸ்கின் கிளினிக்கில் வேம்பயர் ஃபேஷியல் என்று சொல்லப்படும் ரத்தம் மூலம் முகத்தை அழகுப்படுத்த கூடிய சிகிச்சை எடுத்துக் கொண்டு பலனை பெறுவதாக அவரே தம்முடைய இன்ஸ்டாகிராம் வீடியோவில் குறிப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார்.
இது குறித்த தன்னுடைய பதிவில், “என்னுடைய Even-ஆன தோல்நிறம் மற்றும் தோல் அமைப்பு ஆகியவற்றின் பின்னால் உள்ள ரகசியம் குறித்து நீங்கள் ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். smaavins என்கிற கிளினிக் செய்த அதிசயமான VAMPIRE FACIAL தான் அதற்கு காரணம். இவர்களின் வாடிக்கையாளர் மீதான அக்கறையை நான் மிகவும் பாராட்டுகிறேன். பலன்கள் அருமை. நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
சம்மந்தப்பட்டவர்கள் கையிலிருந்து இரத்தத்தை எடுத்து, ரத்த பிளேட்லெட்டுகளைப் பிரித்து, அவற்றை மீண்டும் முகத்தில் தடவுவதை உள்ளடக்கிய ஒரு அழகுபடுத்தும் செயல்முறை தான் இந்த வேம்பயர் ஃபேஷியல். இந்த நடைமுறையானது இளமையாக தோற்றமளிக்கும் தோல் உட்பட பல நன்மைகளைக் அளிப்பதற்காக முறையான நிபுணர்களின் ஆலோசனை மற்றும் ஸ்கின் கிளினிக்கின் வழிகாட்டுதலுடன் மேற்கொள்ளப்படுகிறது.