பிக் பாஸ் புகழ் நடிகை ரைசா வில்சன், பிரபல நடிகருடன் டேட்டிங் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் நலனுக்காக நடிகர் ஒருவருடன் டேட்டிங் செய்யப்போகிறேன் என பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரைசா வில்சன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் அதே நிகழ்ச்சியில் பங்கேற்ற ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதைத் தொடர்ந்து தற்போது ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘தனுசு ராசி நேயர்களே’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் அவருடன் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார். இந்நிலையில், ரைசா வில்சன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழகத்தை மகிழ்ச்சியாக வைக்க ஹரிஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் மகிழ்ச்சிக்கும், ரைசா டேட்டிங் செய்வதற்கும் என்ன சம்மந்தம் என்று பலர் இந்த டுவீட்டுக்கு நகைச்சுவையுடன் கூடிய கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர். இதற்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் எந்த ஒரு பதிலும், விளக்கமும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை ரைசா வில்சன் நடிப்பில் தற்போது ‘அலைஸ்’, ‘எப்.ஐ.ஆர்’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்கள் உருவாகி வருகிறது.
I want to start dating @iamharishkalyan just to make TN happy ❤️ love for love ❤️
— Raiza Wilson (@raizawilson) December 8, 2019