www.garudavega.com

டாஸ்க் நடுவுல பிக் பாஸ் அறிவிச்ச புது விதி.. கொஞ்ச நேரத்தில் வெளியேறிய மைனா.. காரணம் இது தான்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 ஆவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சுமார் 80 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை தற்போது எட்டி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

Bigg Boss announce new rule in between task myna reacts

Also Read | "கொஞ்ச நேரத்துல அடிச்சுப்பாங்களோ?".. ஒண்ணா இருந்த அசிம், விக்ரமன்.. அமுதுவின் தெறி கமெண்ட்!!

அப்படி ஒரு சூழலில், இனி வரும் நாட்களில் இறுதி சுற்று வரை முன்னேற அனைத்து போட்டியாளர்களும் அசத்தலாக விளையாடி ஆக வேண்டும் என்ற நிலையும் உள்ளது.

சமீபத்தில் மணிகண்டா ராஜேஷ் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கின்றனர். விரைவில் Finale வர உள்ளதால், அடுத்தடுத்து எந்தெந்த போட்டியாளர்கள் முன்னேறி செல்வார்கள் என்பதை அறியவும் பார்வையாளர்கள் ஆவலாக உள்ளனர்.

Bigg Boss announce new rule in between task myna reacts

இதற்கு மத்தியில், அனைத்து போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் எதிர்பார்த்த Ticket To Finale சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. நிறைய கடினமான போட்டிகள் உள்ளிட்டவை அடுத்தடுத்து நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் திறனை நிரூபித்தும் வருகிறார்கள். மேலும், அனைத்து போட்டியாளர்களுக்கும் ஏராளமான ரசிகர்கள் இருப்பதால் எந்த போட்டியாளர் முதல் ஆளாக இறுதி சுற்றுக்கு முன்னேறுவார் என்பதை அறியவும் அவர்கள் ஆவலாக உள்ளனர்.

இதனிடையே, Ticket To Finale டாஸ்க்கில் மிதிவண்டி டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் மாறி மாறி போட்டியாளர்கள் மூன்று சைக்கிள்களை இயக்க மற்ற போட்டியாளர்கள் முன்னாடியும் பின்னாடியும் மாறி மாறி ஏறிய படி இருக்கின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்தில் மாறி அமர்வதற்கு 10 வினாடிகள் மேல் எடுத்து கொண்டால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

Bigg Boss announce new rule in between task myna reacts

இதில், மாறி மாறி அமர்வதை போட்டியாளர்களே திட்டம் போட்டு மாறி கொள்ளலாம் என்றும் பிக் பாஸ் அறிவிக்கிறார். மிகவும் விறுவிறுப்பாகவும், அதே வேளையில் சிறப்பான டாஸ்க்காகவும் இது அமைந்திருந்தது.

இதனிடையே இந்த டாஸ்க்கில் கடைசியாக ரச்சிதா, விக்ரமன், அமுதவாணன், மைனா நந்தினி மற்றும் ஷிவின் உள்ளிட்டோர் இருக்கும் போது பிக் பாஸ் புதிய விதி ஒன்றை அறிவிக்கிறார். அதாவது, ஒரு Buzzer சத்தம் கேட்கும் போது ஒரு போட்டியாளர் விலக வேண்டும் என்பது தான் அந்த விதி. இதனை போட்டியாளர்களுக்குள்ளே கலந்து பேசி முடிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்.

Bigg Boss announce new rule in between task myna reacts

எதன் அடிப்படையில் ஒரு நபரை வெளியேற்ற முடியும் என விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் கேள்வியும் எழுப்புகின்றனர். மறுபக்கம், சைக்கிளில் நீண்ட நேரமாக போட்டியாளர்கள் இருப்பதால் அவர்கள் சோர்ந்து போயும் உள்ளனர். அதிலும் கம்பியில் உட்கார்ந்திருக்கும் நபர்கள் உட்கார கூட முடியாமலும் டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும் என அப்படியே இருக்கின்றனர்.

அப்போது, Buzzer சத்தம் கேட்பதற்கு முன்பாகவே தானாக முன் வந்து மைனா நந்தினி எழுந்து வெளியேறுகிறார். தன்னால் இதற்கு மேல் உட்கார முடியாது என்றும் கூறி மிகுந்த வேதனையுடனும் நடந்து செல்கிறார்.

Also Read | "என்னை ஒரு கேள்வி கூட கேக்கல, ஆனா ரச்சிதாவுக்கு மட்டும்"... விக்ரமனை ஜாலியாக கிண்டிய ADK!!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss announce new rule in between task myna reacts

People looking for online information on Bigg Biss, Bigg Boss 6, Bigg boss 6 tami, Bigg Boss Tamil, Myna Nandhini will find this news story useful.