குழந்தை நட்சத்திரமாக ஏராளமான படங்களில் நடித்திருந்தவர் நடிகை ஆர்த்தி. பின்னர் ஏராளமான படங்களில் காமெடி வேடங்களில் நடித்து நம்மை வயிறு குலுங்க சிரித்து வைத்துக்கொண்டிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இந்நிகழ்ச்சியின் மூலம் அதிக கவனம் பெற்றார். அவரது கணவரான காமெடி நடிகர் கணேஷும் குழந்தை நட்சத்திரமாக திரையுலகுக்கு அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் சன் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் 10 நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில் நடிகை ஆர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், தானும் தனது கணவர் கணேஷும் சிறுவயதில் இணைந்து நடித்திருந்த ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். அதில், ''பேபி ஆர்த்தியும் மாஸ்டர் கணேஷூம் முதன்முறையாக ஒன்றாக நடித்த படம். கடவுள் என்னை 2 வயதிலேயே என் கணவரை சந்திக்க வைத்திருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
This is #baby Aarthi and #Master ganesh first film together... God made me meet my husband at my age of 2yrs😊😍🤩 #memories #actress ...great #Srividhya Amma❤ pic.twitter.com/UHCzyucGAq
— Actress Harathi (@harathi_hahaha) July 10, 2020