வழக்கமாக நட்சத்திரங்களின் அணிவகுப்புடன் பிரம்மாண்டமாக நடைபெறும் பிரபலங்களின் திருமணங்கள் கூட கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக மிக எளிமையாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணங்களில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்கின்றனர்.
அதன் ஒரு பகுதியா பிரபல மலையாளம் பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளரும் நடிகருமான பிரதீப் சந்திரனுக்கும் அனுபமா என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியருக்கும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
நடிகர் பிரதீப் 'கருத்தமுத்து' என்ற சீரியலில் அபிராம் என்ற வேடத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அவர் புகழ்பெற்றார். அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஒரு சேர வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.