www.garudavega.com
iTechUS

"BREAK THE RULES".. பிக் பாஸ் வின்னர் அசிம் & முந்தைய போட்டியாளர் வனிதா விஜயகுமார்.. TRENDING

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், சமீபத்தில் நடந்து முடிந்திருந்தது. இந்த சீசனில் களமிறங்கி இருந்த 21 போட்டியாளர்களும் வெற்றி பெறும் தகுதி உடையவர்களாக இருந்ததால் அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாக அரங்கேறி இருந்தது.

Bigg boss 6 title winner azeem meets vanitha pic viral

Images are subject to © copyright to their respective owners

அதே போல அடுத்தடுத்து எலிமினேஷன்கள், டாஸ்க்குகள், சண்டைகள், விவாதங்கள், கலகலப்பான சம்பவங்கள், எமோஷன்கள் என அனைத்தும் நிறைந்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் Finale -விற்கு அசிம், ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகிய 3 பேர் தகுதி பெற்றிருந்தனர்.

3 பேருக்குமே மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததால் எந்த போட்டியாளர் வெற்றி பெறுவார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவல், கடைசி நிமிடம் வரை பார்வையாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. தொடர்ந்து, ஷிவின் 3 ஆவது இடத்தை பிடித்ததாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார்.

இதற்கடுத்து, அசிம் மற்றும் விக்ரமன் ஆகியோரின் கையைப் பிடித்தபடி நின்ற கமல்ஹாசன், தான் யார் கையை உயர்த்துகிறாரோ அவர் தான் வெற்றியாளர் என்றும் அறிவித்திருந்தார். இரண்டு பேர் கையையும் மாறி மாறி உயர்த்தியபடி இருந்த கமல்ஹாசன், இறுதியில் அசிம் கையை நிலையாக உயர்த்தி அவர் தான் டைட்டில் வின்னர் என்பதையும் அறிவித்திருந்தார். தொடர்ந்து, அவருக்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

Bigg boss 6 title winner azeem meets vanitha pic viral

Images are subject to © copyright to their respective owners

அதே போல, இறுதி சுற்று வரை முன்னேற்றம் கண்டிருந்த ஷிவின் மற்றும் விக்ரமன் ஆகியோருக்கு மக்கள் மத்தியில் அமோக ஆதரவும் கிடைத்திருந்தது. தொடர்ந்து, அனைவரும் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்துள்ள நிலையில், அவர்கள் செல்லும் இடம் எல்லாம் உற்சாக வரவேற்பையும் மக்கள் அளித்து வருகின்றனர்.

தொடர்ந்து, தங்கள் வெளியிடும் வீடியோக்களில் கூட மக்கள் அளிக்கும் வரவேற்பு குறித்து நெகிழ்ச்சியான கருத்துகளையும் போட்டியாளர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், பிக் பாஸ் டைட்டில் வின்னரான அசிம், தனக்கு பரிசாக கிடைத்த பணத்தில் இருந்து 25 லட்ச ரூபாயை கொரோனா தொற்று மூலம் பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவிகளின் கல்விக்கு அளித்து உதவி செய்யப் போவதாக தெரிவித்திருந்தார். அதே போல, தன்னை ஜெயிக்க வைத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார் அசிம்.

 

இந்த நிலையில், பிக் பாஸ் 3 ஆவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி இருந்த வனிதாவை அசிம் சமீபத்தில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வனிதா பகிர்ந்துள்ளார். மேலும் தனது கேப்ஷனில், "நாங்கள் இங்கே மற்றவர்களுக்கு உதாரணமாக இருப்பதற்காக இங்கே இல்லை. விதிகளை உடைக்க வந்துள்ளோம்" என குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 6 title winner azeem meets vanitha pic viral

People looking for online information on Azeem, Bigg Boss Tamil 6, Vanitha will find this news story useful.