தமிழில் சமீபத்தில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது.
Image Credit : vijay television
Also Read | “அடுத்தடுத்து நிறைய படங்கள்”.. அடடே.. பிக்பாஸ் ஜனனியின் வெள்ளித்திரை பிரவேசம்..!
இந்த சீசனில் மொத்தம் 21 பேர் போட்டியாளர்களாக களமிறங்கி இருந்த நிலையில், அனைத்து எபிசோடுகளும் விறுவிறுப்பாகவும் நிறைந்த படி சென்றது. மொத்தமுள்ள போட்டியாளர்களில் இருந்து அசிம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர், Finale சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்தனர். இதில், ஷிவின் 3 ஆவது இடம் பிடித்திருந்தார். இதற்கடுத்து, பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அசிம் டைட்டில் வின்னர் என கமல்ஹாசன் அறிவித்திருந்தார். மேலும் அவருக்கு 50 லட்ச ரூபாயும், காரும் பரிசாக வழங்கப்பட்டிருந்தது.
இதனிடையே பிக்பாஸில் இருந்து வந்த பின் வீடியோ வெளியிட்ட அசிம், தனது ரசிகர்கள் மற்றும் தனக்கு ஆதரவளித்த அனைத்து தமிழ் மக்களுக்கும் தனது நன்றிகளையும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதில் பேசிய அசிம், "என்னுடைய தமிழ் பெருங்குடி சொந்தங்களுக்கும் உலகெங்கிலும் வாழும் என் இனிய தமிழ் மக்களுக்கும் என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அன்பு நெஞ்சங்களுக்கும், தமிழ் இல்லங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனது உயிர் அன்பு உறவுகளுக்கும் இந்த எளிய தாய்மகனின் நன்றி கடந்த கோடான கோடி வணக்கங்கள்.
Image Credit : vijay television
பிக் பாஸ் சீசன் சிக்ஸ் கப் அடிச்சிட்டோம் ரொம்ப நன்றி. இந்த பிக் பாஸ் வீட்ல 106 நாள் விளையாடினது என்னமோ நான் தான். ஆனா நான் விளையாடும்போது பல ஏச்சுகளையும், பேச்சுகளையும் பல துன்பங்களையும், பல சங்கடங்களையும் நான் சந்தித்திருக்கிறேன். சந்திக்கும்போதெல்லாம் நான் நினைச்சது, நம்மள நாம நம்பலனா வேற யாரும் நம்புவாங்கன்னு. என்னோட நம்பிக்கையை நீங்க மெய்படுத்துனீங்க. ஒவ்வொரு வாரம் என்னை நாமினேட் பண்ணும் போதும், 14 வாரமும் நான் நாமினேட் ஆனாலும் ஃபைனல் போவேன் அப்படின்னு சொன்ன வார்த்தையை நிஜமாக்கியது என்னுடைய தமிழ் மக்கள் தான். நீங்க இல்லன்னா நான் இந்த அசிம் இல்ல" என உருக்கத்துடன் பேசி இருந்தார்.
இன்னும் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அசிம், பிக் பாஸ் வீட்டில் கூறியது போலவே தனக்கு பரிசாக கிடைத்த 50 லட்சம் ரூபாயில் இருந்து 25 லட்ச ரூபாயை கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோர்களை இழந்தம் மாணவ, மாணவிகளின் படிப்பு செலவுக்காக அளிக்க போவதாகவும் தெரிவித்திருந்தார்.
Image Credit : vijay television
இந்நிலையில் அசிம் தரப்பினரால் நிர்வகிக்கப்படும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் ஹேண்டிலில், “எம் மக்களுக்கு வணக்கம்🙏🏻 சிலர் தோல்வியை தாங்க முடியாமல் பேசுவதை நாம் பொருட்படுத்த வேண்டாம். நம்மை நோக்கி சுமத்தப்படும் விமர்சனங்கள் வெறும் சொற்கள் தானே தவிர நம்மை தாக்கும் கற்கள் அல்ல. அதை படிக்கல்லாக பயன்படுத்தி நம் இலக்கை அடைவோம்.நாம் செய்யப்போகும் நற்செயல்கள் பல !! நன்றி🙏🏻” என குறிப்பிடப் பட்டுள்ளது. இந்த ட்வீட் வைரலாகி வருகிறது.
Also Read | மாஸ் பண்ணிட்டீங்க.. சொன்னதை செஞ்ச பிரியா பவானி சங்கர்..! தேதியுடன் அவரே வெளியிட்ட தகவல்..!