www.garudavega.com

ஹவுஸ்மேட்ஸ்-க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக்பாஸ்.. களைகட்டிய வீடு.. இதுக்கு தான் WAITING!!.. BIGG BOSS TAMIL 6

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன், ஒளிபரப்பாகி வருகிறது. சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி உள்ளிட்ட போட்டியாளர்கள் வீட்டில் இருந்து வெளியேறி இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டிற்குள் அசிம், விக்ரமன், மைனா, அமுதவாணன் உள்ளிட்ட 9 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர்.

Bigg boss 6 tamil new task housemates excited

Also Read | "வாரிசு பத்தி எதுவும் தெரியாது".. பிரபல கோயிலில் சாமி தரிசனம் செய்த பிறகு ஷோபா பேட்டி..

இனி வரும் நாட்கள் மிக முக்கியமானவை என்பதால், அனைத்து போட்டியாளர்களும் இறுதி சுற்று வரை முன்னேற டாஸ்க்கில் சிறந்து விளங்க வேண்டும் என்ற கட்டாயத்த்லும் உள்ளனர்.

இதனால், வரும் நாட்கள் விறுவிறுப்பு நிறைந்தவையாக இருக்கும் என்றும் பிக்பாஸ் பார்வையாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

முன்னதாக, பிக்பாஸ் வீடு கடந்த வாரம் ஆரம்ப பள்ளியாகவும், பின்னர் மேல்நிலைப் பள்ளியாகவும், அதன் பின்னர் கல்லூரி ஆகவும் மாறி இருந்தது. இந்த டாஸ்க்கின் போது போட்டியாளர்கள் அனைவரும் ஆசிரியர்களாகவும், மாணவர்களாகவும் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்திருந்த விஷயம் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்திருந்தது. பொதுவாக ஒரு டாஸ்க் என வந்து விட்டால் பிக்பாஸில் ஏராளமான சண்டைகள் நடைபெறுவதை நாம் நிறைய கேள்விப்பட்டிருப்போம்.

Bigg boss 6 tamil new task housemates excited

ஆனால் கடந்த டாஸ்க்கில் போட்டியாளர்கள் அனைவரும் மாணவர்களாகவும், ஆசிரியர்களாகவும் பேராசிரியர்களும் வலம் வந்ததுடன் மட்டும் இல்லாமல், மிகவும் கலகலப்பாகவும் தங்களின் பணிகளை செய்தனர். இதனால் டாஸ்க் மிகவும் உற்சாகமாக தான் சென்று கொண்டிருந்தது. அதே வேளையில் டாஸ்க் முடிந்த பின்னர் ரேங்கிங் டாஸ்க் வந்த சமயத்தில், ஏராளமான சண்டைகள் அரங்கேறி இருந்தது.

Bigg boss 6 tamil new task housemates excited

அதே போல, குடும்பத்தினர் குறித்து சில உருக்கமான கருத்துக்களையும் போட்டியாளர்கள் பேசி மனம் கலங்கி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, தனலட்சுமியும் வீட்டில் இருந்து வெளியேற மற்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் வலம் வருகின்றனர்.

Bigg boss 6 tamil new task housemates excited

இந்த நிலையில், இந்த வாரத்திற்காக போட்டியாளர்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி ஒன்றை பிக் பாஸ் கொடுத்துள்ளது. Freeze Task எனப்படும் சுற்றில், போட்டியாளர்களின் குடும்பத்தினர் அனைவரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தருகின்றனர். மைனா நந்தினி, ஷிவின் உள்ளிட்ட பல போட்டியாளர்கள் தங்களின் குடும்பத்தினரின் வருகையால் கண் கலங்கவும் செய்கின்றனர். கடந்த வாரம் குடும்பத்தினர் குறித்து கலங்கிய போட்டியாளர்கள், தற்போது அனைவரையும் நேரில் காணும் டாஸ்க் நடந்ததால் மிகுந்த உற்சாகத்தில் அவர்கள் இருப்பது தெரிகிறது.

Also Read | "கடவுள் என்ன நினைக்கிறாரோ".. விஜய்யின் அரசியல் ஈடுபாடு குறித்து பதில் அளித்த ஷோபா!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 6 tamil new task housemates excited

People looking for online information on Bigg boss 6 tamil, Bigg Boss Freeze Task, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Vijay Television, Vijay tv will find this news story useful.