www.garudavega.com

எலிமினேஷனுக்கு பிறகு வைரல் ஆகும் மணிகண்டா ராஜேஷின் முதல் போஸ்ட்.! BIGG BOSS 6 TAMIL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் 6வது சீசன் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. டிஸ்னி+ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் நேரலையில் ஒளிபரப்பாகி வருகிறது. 

bigg boss 6 tamil Manikanda Rajesh post after elimination

Also Read | Sunny Leone : “அதை Purpose-ஆ பண்றார்😍!”.. கணவரிடம் பிடிக்காத விஷயம் குறித்து சன்னி லியோன்

நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரச்சிதா மகாலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், சாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி, வைல்டு கார்டு எண்ட்ரியில் மைனா உள்ளிட்ட நபர்கள் பங்கேற்றனர்.

bigg boss 6 tamil Manikanda Rajesh post after elimination

இவர்களுள் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து முதலிலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். பின்னர் அசல், ஷெரீனா, மகேஷ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி, ராம், ஆயிஷா, ஜனனி, தனலட்சுமி ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். கடைசிவாரத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து மணிகண்டா ராஜேஷ் வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய மணிகண்டா ராஜேஷ் தம்முடைய நன்றியை தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரான இவர், நடிகை சோஃபியாவின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக்பாஸில் இருந்து வெளியேறிய மணிகண்டா ராஜேஷ், தம்முடைய வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

bigg boss 6 tamil Manikanda Rajesh post after elimination

இது தொடர்பான தமது அந்த பதிவில், “பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தது என் வாழ்வில் மறக்க முடியாத ஒரு பயணம். அந்த பயணம் என் மனதில் என்றுமே இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், என் சக போட்டியாளர்களுடன் இருந்த அந்த தருணம் எனக்கு பல கற்றல்களை கொடுத்தது. அவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தேன். என் வாழ்நாளில் மறக்க முடியாத இந்த அனுபவத்தை கொடுத்த பிக் பாஸ் டீமுக்கும், கமல்ஹாசன் சாருக்கும் நன்றி” என குறிப்பிட்டவர், லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், என்னை ஆதரித்த ரசிகர்களுக்கும் நன்றி” என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Also Read | Breaking : ‘இதுவல்லவோ அப்டேட்..!’.. விஜய் படத்தில் இணைகிறாரா இயக்குநர் மிஷ்கின் ? | Vijay

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bigg boss 6 tamil Manikanda Rajesh post after elimination

People looking for online information on Bigg Boss 6, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Kamal Haasan, Manikanda Rajesh will find this news story useful.