தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் கொஞ்ச நாட்களே மீதம் இருப்பதாக தெரியும் நிலையில் கடந்த வாரம் சிறப்பான வாரமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அமைந்திருந்தது.
இதற்கு காரணம் தற்போது ஏழு போட்டியாளர்கள் வீட்டுக்குள் இருக்கும் நிலையில் இதற்கு முன்பு வீட்டில் இருந்து வெளியேறிய ஏராளமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளனர். அவர்கள் வருகையின் காரணமாக மிகவும் கலகலப்பாகவும் பிக் பாஸ் வீடு மாறி இருந்தது. இதற்கு மத்தியில் சில டாஸ்குகளும் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது நிலையில், அதன் காரணமாக சில குழப்பங்கள் கூட அரங்கேறி இருந்தது. Sacrifice டாஸ்க் என்ற பெயரில் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஏதாவது ஒரு கடினமான வேலை ஒன்றை டாஸ்காக கொடுக்கப்படுகிறது.
உதாரணத்திற்கு பிக் பாஸ் வீட்டை கடந்த சில நாட்களாக லுங்கி மற்றும் பனியன் தான் அசிம் வளம் வந்திருந்தார். அவரைப் போல அமுதவாணனும் பிரவுன் நிற தலைமுடியுடன் இருக்க வேண்டும் எனவும் பிக்பாஸ் அறிவுறுத்தி இருந்தார். இதனை தொடர்ந்து முந்தைய போட்டையாளர்கள் அனைவரும் மீண்டும் வந்த பின் Sacrifice டாஸ்க் 2.0 என்ற பெயரில் மீண்டும் சில டாஸ்க்குளும் கொடுக்கப்பட அதன்காரணமாக சில பிரச்சனைகளும் நடைபெற்றது. இப்படியாக இந்த வாரம் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தற்போது கமலஹாசனும் வார இறுதி எபிசோடுகளில் தோன்றியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து அசிம், கதிரவன் உள்ளிட்டோர் இறுதிச்சுற்றுக்கும் முன்னரே இருந்ததாக கமல் தெரிவித்திருந்த நிலையில் தற்போது யார் வெளியேறுவார் என்பதும் உறுதியாகியுள்ளது. அதன்படி பிக் பாஸ் வீட்டின் சிறந்த போட்டியாளராக வலம் வந்த ஏடிகே, கடைசி வாரத்திற்கு முன்பு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். இறுதிச்சுற்றுக்கு முன்னேறுவார் என கருதப்பட்ட ஏடிகே, தற்போது வெளியேறியுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனினும் ஏடிகே வெளியேறும்போது பொங்கல் பானையை உறி அடித்து கமலிடம் பாராட்டு பெற்றார். மேலும் பிக்பாஸ் அவரை, “வெல் ப்ளேய்டு ஏடிகே... வெளியில் உங்கள் விஸ்வரூப வெற்றிக்கு ஆல் தி பெஸ்ட்” என கூறினார். அப்போது ஏடிகே, “நான் இப்படியெல்லாம் செய்ய மாட்டேன்.. ஆனாலும்” என கூறி, பிக்பாஸ் வீட்டு முன்பு மண்டியிட்டு வணங்கி பின், “என் நாட்டில் இருந்து வந்து இந்த அன்பை பெற்றதற்கு மகிழ்ச்சி, அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.