நவம்பர் 20, பிக்பாஸ்: ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வார வாரம் விதவிதமான டாஸ்க்குகள் வழங்கப்படும். அவ்வகையில் கடந்த வாரம் முழுக்க பிக்பாஸ் வீடு அரண்மனையாக மாறியது,. இதில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு கதாபாத்திரத்தை எற்றனர். அவ்வகையில் ராஜாவாக ராபர்ட் மாஸ்டர், ராணியாக ரச்சிதா, படைத்தளபதியாக அசீம், அரசவை ஆலோசகராக (ராஜகுருவாக) விக்ரமன், இளவரசராக மணிகண்டா ராஜேஷ், இளவரசியாக ஜனனி தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் ராஜா - ராணிக்காக உணவு சமைக்கும் போது அதில் உப்பை அள்ளிப்போட்டுவிட்டதாக பணியாளர்கள் மீது ரச்சிதா கோபம் கொண்டு சாப்பிடாமல் எழுந்து சென்றுவிட்டார். இதில் தொடங்கி, படைத்தளபதி அசீம், ‘உணவில் காரி துப்பிக் கொடுக்கவா?’ என விக்ரமனிடம் ஆக்ரோஷமாக கேட்டதுவரையில் அத்தனையும் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பானது.
ஒருவழியாக இப்படி நடந்து முடிந்த இந்த டாஸ்கில், 3 பெஸ்ட் பெர்ஃபார்களாக மைனா, மணிகண்டன், தனலட்சுமி ஆகியோர் சக ஹவுஸ்மேட்ஸ்களின் நாமினேஷன்களின் இறுதிப் பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் மூவருமே அடுத்த வார தலைவர் போட்டியில் போட்டியிடத் தகுதி உள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர். இதேபோல் மோசமான பெர்ஃபார்மர்களாக ராபர்ட் & ரச்சிதா தேர்வாகி சிறைக்கு அனுப்பப்பட்டனர்.
இந்நிலையில் இந்த வார இறுதியில் வந்த கமல்ஹாசன், இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்று ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டபோது, ஒவ்வொரு ஹவுஸ் மேட்ஸும் பதில் கூறினர். இதில் மைனா மட்டும் நிவாஷினி வெளியேறுவார் என்று கூறினார். ஆனால் ஆயிஷா, மணிகண்ட ராஜேஷ், தனலட்சுமி, ஷிவின் என பலரும் அசிம்தான் வெளியேறுவார் என்று கருதுவதாக ஆணித்தரமாக கூறினர். இதனை தொடர்ந்து பேசிய விக்ரமன் அசிம் வெளியே போக வேண்டும் என்று, தான் விரும்புவதாக நேரடியாகவே கமல் முன்னிலையில் குறிப்பிட்டார்.
மேலும் இதற்கு காரணத்தையும் விக்ரமன் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் சென்றால் ஒரு தொந்தரவு குறையும், இந்த வீட்டில் ஒரு சமநிலை அவரால் குலைகிறது, அது அவர் வெளியேறினால் மீண்டும் பேலன்ஸ் ஆகும், எனவே அவர் வெளியே போவதாக போக வேண்டும் என்று தான் விரும்புவதாக தெரிவித்தார். பின்னர் இறுதியில் இந்தவாரம் யார் வெளியேற போகிறார் என்பதை கமல்ஹாசன் அறிவித்தார்.
அதன்படி நிவாஷினி இந்த வாரம் வெளியேறுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அதன் பின்னர் அனைவரிடமும் இருந்து விடைபெற்றார் நிவாஷினி. முன்னதாக அசல் கோலார் வெளியேறியதும் நிவாஷினி அடுத்த சில நாட்கள் சாப்பிடாமல் கொள்ளாமல் இருந்தார்.
இந்நிலையில் இந்த வாரம் நிவாஷினி எலிமினேட் ஆனதும் குயின்ஸி கதறி அழுதார். பின்னர் வெளியே வந்த நிவாஷினியிடம், “நீங்கள் மீடியாவில் வெளிச்சம் கிடைப்பதை நோக்கமாக கொண்டீர்கள்.
இந்நிகழ்ச்சியில் அதற்கான பாதை நோக்கி நகர்ந்தீர்கள் என நினைக்கிறீர்களா?” என கமல்ஹாசன் கருத்து கேட்டதற்கு, “ஓரளவுக்கு நான் அதை நோக்கி நகர்ந்திருப்பதாக நினைக்கிறேன். ஆனால் நிறைவாக இல்லை. வீட்டுக்குள் ஸ்ட்ரெஸ் இருந்தது. பிக்பாஸ் வீட்டில் ஒரு ப்ரஷர் குக்கர் மாதிரி இருந்தேன். ரிலேஷன்ஷிப், ப்ரண்ட்ஷிப் முதலானவற்றால் விளையாட்டில் தடை ஏற்பட்டது. அதை ஒப்புக்கொள்கிறேன். இதை சரியாக பயன்படுத்தினேனா என தெரியவில்லை, ஆனால் என் பெஸ்ட்டை நான் செய்ததாக நினைக்கிறேன்” கூறினார்.
அதன் பின்னர் பேசிய கமல்ஹாசன், “நீங்கள் இதை சரியாக பயன்படுத்தினீர்களா இல்லையா என்பதை வெளியில் சென்றதும் அறிவீர்கள். நீங்கள் தமிழ் மக்களின் அன்பை நீங்கள் எடுத்துக்கொண்டு செல்கிறீர்கள். உங்கள் நாட்டுக்கு போனதும் தெரிந்துகொள்வீர்கள்” என குறிப்பிட்டார்.