நேற்றைய பிக்பாஸிலும் சனம் ஷெட்டி -பாலாஜி முருகதாஸ் இடையிலான மாடலிங் பிரச்சினை தீரவில்லை. நேற்று முன்தினம் பாலாஜிக்கு ஆதரவு கொடுப்பது போல பேசிய கமல் நேற்று சனம் ஷெட்டிக்கு ஆதரவு அளித்தார். டுபாக்கூர் போன்ற வார்த்தைக்கு எனக்கே அர்த்தம் தெரியாது எனவும் பாலாஜி முருகதாஸிடம் அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசும்போது கடந்த வார பிக்பாஸ் வீட்டின் கேப்டன் ரம்யா பாண்டியனிடம், கமல் விசாரணை நடத்தினார். அப்போது ரம்யாவிடம் பேசிய அவர் நீங்கள் தவறான பக்கம் இருந்தீர்கள் என்பதையும் எடுத்து உரைத்தார். ரம்யா என்ன நடந்தது என்பது முழுமையாக தெரியாமல் பாலாஜி முருகதாஸ்க்கு ஆதரவாக இருந்ததை தான் கமல் அவருக்கு சுட்டிக்காட்டினார். நான் பார்த்துட்டு தான் இருக்கேன் என அவர் சொன்ன விதம் சிறப்பாக இருந்தது.
#RamyaPandian matningala ? For sombu tuking for - balaji
Never disrespect someones achievement - true words by kamal sir #BalajiMurugaDoss #SanamShetty #BiggBossTamil4 #BiggBossTamil
— Felice (@Cloudni89747183) October 11, 2020
இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸ்-சனம் ஷெட்டி பிரச்சினையை கமல் கையாண்ட விதம் நன்றாக இருந்ததாகவும், ரம்யாவின் தவறை அழகாக சுட்டியதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த வாரத்தின் கேப்டன் சுரேஷ் சக்கரவர்த்தி என்பதால் வரும் நாட்களில் பிக்பாஸ் வீட்டில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Kamal catches Ramya's bias in Sanam-Balaji issue 'red-handed' 👏👏👏
One of the most pathetic and partial captaincies ever.#BiggBossTamil #BiggBossTamil4
— Bigg Boss Troll-Slayer (@BBTrollSlayer) October 11, 2020