பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு வாரம் என்னென்ன நடந்தது என எல்லாவற்றையும் ரசிகர்கள் பார்த்திருப்பார்கள். சண்டைகள், சச்சரவுகள், கோபம், அழுகை என எல்லாம் இருந்தன.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய கட்டமாக இரண்டாம் வாரத்தில் முதிலில் வீட்டை விட்டு வெளியேறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இதில் கவின், சாக்ஷி, சேரன், மதுமிதா, ஃபாத்திமா, மீரா ஆகியோரின் பெயர் இருக்கிறது. இதில் யார் காப்பாற்றபடப்போகிறார்கள் என விரைவில் தெரிந்து விடும்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் டாஸ்க் கொடுக்கும் படலம் தொடங்கிவிட்டது. போட்டியாளரான வனிதாவுக்கு அதிக எடை கொண்ட மனிதரை தூக்கும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அவர் செய்து முடிக்க பரிசாக வாழைப்பழ தார் அனுப்படுகிறது. அதனை சேரன் சுமந்து வருகிறார்.