பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இன்று காலை வெளியான முதல் புரோமோவில் சாக்ஷி மற்றும் ஷெரினிடம் பேசும் வனிதா, இந்த பிக்பாஸ் வீட்டில் Affair நடக்கிறது என்று பேசினார். அப்போது Affair என்ற வார்த்தையைக் கேட்ட ஷெரின் கடும் கோபத்துடன் வனிதாவை கண்டித்தார்.
இரண்டாவது புரோமோவில், சேரன் ஷெரினை சமாதானப்படுத்துகிறார். அப்போது ''Affairனு சொல்றாங்க சார் எப்படி சார் சும்மா இருக்க முடியும். அந்த மாதிரி வார்த்தை யூஸ் பண்ணது என்னால முடியல சார்.
அந்த பையன் பக்கமே நான் போகல. வேறு யாராவது வாயில் இருந்து அந்த வார்த்தை வந்திருந்தாலும் பரவாயில்ல. அனா அவ என்னோட ஃபிரெண்ட். எனக்கு கஷ்டமா இருக்கு. எனக்கு தர்ஷனோடவும் பேச வேணாம். வனிதாவோடவும் பேச வேணாம்'' என்று அழுதார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது பெரும் ப்ரோமோவில் ஷெரின் நேற்று நடந்த டாஸ்கில் என்னுடைய முழு பங்களிப்பு இருக்கிறது என்கிறார் அதற்கு வனிதா அப்படி எல்லாம் கிடையாது என்கிறார். பின் சாண்டியை பார்த்து ஒவ்வொரு முறையும் ஏன் இந்த கேள்வி உங்களுக்கு எழுகிறது உங்களுக்கு எதுவும் வெட்டி முறிக்கிற வேலை இருந்தால் போய் பாருங்கள் என்கிறார் வனிதா. பின் வனிதாவுக்கும் சேரனுக்கும் இடையே பெரும் வாக்குவாதம் நடக்கிறது
#Day74 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/snYuQlqg1t
— Vijay Television (@vijaytelevision) September 5, 2019