Fakir Others Banner USA

‘9 மாத குழந்தை ...’ மனதை கனக்கச் செய்த இழப்பு - பிக் பாஸ் 3 வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடிற்கான புதிய புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

Bigg Boss 3 Promo video- Reshma Pasupuleti shares unforgettable 9 months Pregnancy loss

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 3வது நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 15 போட்டியாளார் பங்கேற்றுள்ள இந்த சீசன் தொடங்கியதில் இருந்து பெரிய அளவில் எவ்வித பரபரப்பும் இன்றி, ஆட்டம், பாட்டம், காதல், மோதல் என சில பல விஷயங்கள் நடந்தேறி வருகின்றன.

இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரொமோ வெளியானது. அதில் மாடல் அழகிகளான அபிராமி மற்றும் மீரா இடையே வாக்குவாதம் முற்ற, அதனை தடுக்க முயன்ற வனிதாவை கத்தி பேசாதீங்க BP தான் ஏறும் என மீரா கூறியதால் சலசலப்பு நிலவுகிறுது. அதைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள புரொமோவில், டாஸ்க் ஒன்றில், உங்கள் குடும்பத்தில் யாருடைய இழப்பு உங்களை மிகவும்பாதித்தது என பாத்திபா பாபு கேள்வி எழுப்புகிறார்.

இதற்கு ரேஷ்மா கதறியபடி கூறிய பதில் அனைவரையும் கலங்கச் செய்தது. ‘9 மாதம் கர்ப்பமாக இருந்தபோது வயிற்றில் இருந்த தனது குழந்தைக்கு இதயத்துடிப்பு நின்றுவிட்டது, ஒன்றும் செய்ய முடியாது என மருத்துவர்கள் கூறினர். குழந்தையின் இழப்பு என் வாழ்வில் மறக்க முடியாதது. அடிக்கடி ஏன் அமெரிக்கா போற என கேட்பார்கள், அங்கு தான் அவனது கல்லறை இருக்கு’ என்றார். ரேஷ்மாவின் இந்த இழப்பிற்கும் அவரது கண்ணீருக்கும் அவ்வளவு எளிதில் யாராலும் ஆதரவு கூறிவிட முடியாது.

‘9 மாத குழந்தை ...’ மனதை கனக்கச் செய்த இழப்பு - பிக் பாஸ் 3 வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 3 Promo video- Reshma Pasupuleti shares unforgettable 9 months Pregnancy loss

People looking for online information on Bigg Boss 3, Bigg Boss Tamil 3, Kamal Haasan, Reshma Pasupuleti will find this news story useful.