விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ஆடியன்ஸை கவர்ந்தது நட்பும், அதையும் தாண்டி புனிதமான உறவும் தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அந்த வகையில் இந்த சீசனில் சாக்ஷி, கவின், லாஸ்லியா ஆகியோரின் முக்கோண காதலும், நட்பும், முகென் ராவ் மற்றும் அபிராமி இடையிலான நட்பையும் தாண்டிய புனிதமான உறவும் ஹைலைட்டாக அமைந்தது. பிக் பாஸ் வீட்டில் ஷெரின், லாஸ்லியாவிற்கு இணையாக முகென் ராவிடம் அபிராமி நெருக்கமாக பழகி வந்தார்.
இந்நிலையில், போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்ட அபிராமி, பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று வெளியேறிய போட்டியாளர்களை வரிசையாக சந்தித்து அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இதனிடையே, அபிராமி நடிகையாக அறிமுகமான தல அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியாகி அதன் வெற்றியையும் கொண்டாடி வந்தார்.
இதைத் தொடர்ந்து, கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் சிறப்பு விருந்தினராக அபிராமி ரீ-எண்ட்ரி கொடுத்தார். அப்போது சிரித்த முகத்துடன் நிறைய கலாட்டாவான விஷயங்களை செய்து மக்கள் மனதில் அபிராமி இடம்பிடித்தார். தற்போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே இருக்கும் அபிராமி, தனது நெருங்கிய நண்பனான முகென் ராவின் அம்மாவை நேரில் சந்தித்துள்ளார்.
முகென் ராவின் அம்மாவுடன் அபிராமி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.