பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. முதல் முறையாக ஓபன் நாமினேஷன் நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த வாரத்திற்கான புதிய டாஸ்க் கொடுக்கப்படுகிறது. அதாவது பிக்பாஸ் வீடு ஒரு கோழி பண்ணையாகவும், பாதி பேர் கோழிகளாகவும், பாதி பேர் நரிகளாகவும் இருந்து முட்டைகளை திருட வேண்டும் என்று டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது அர்ச்சனாவுக்கும், ஆரிக்கும் இடையே மோதல் ஏற்படுவதை காணமுடிந்தது. இந்நிலையில் இன்று மீண்டும் சோம் மற்றும் அர்ச்சனா இடையே சண்டை எழும்புவதை காண முடிகிறது. அதன் பிறகு அவர் பிக்பாஸிடம் கதறி அழுவதையும் பார்க்க முடிகிறது.