மிஷ்கின் இயக்கத்தில் 'சித்திரம் பேசுதடி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் பாவனா. அதனைத் தொடர்ந்து 'வெயில்', ஜெயம் ரவியுடன் 'தீபாவளி', தல அஜித்துடன் 'அசல் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
பாவனா தமிழ் மட்டுமல்லாமல், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் கடந்த 2018-ல் வெளியான 96 படத்தின் கன்னட ரீமேக்கான 99 படத்தில் த்ரிஷா வேடத்தில் பாவனா நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
இந்நிலையில் நடிகை பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெற்றோரின் திருமண தினம் குறித்து உருக்கமான பதிவை எழுதியுள்ளார். அதில், ''அப்பா அம்மா, என்னால உங்களை சிறந்த பெற்றோர்கள் கிடைக்க நான் எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டவள் என்று என்பதை என்னால் வார்த்தைகளால் கூற முடியவில்லை. ஒரு மகளாக, உங்களை இருவரையும் சிறப்பானவர்களாக பார்க்கிறேன். திருமணநாள் வாழ்த்துகள். அப்பா நீங்கள் எங்களுடன் இல்லாமல் இருக்கலாம். எங்களுடைய அன்பு என்றும் மரிக்காது'' என்று தெரிவித்தார்.