Kaateri Mobile Logo Top
www.garudavega.com

"அவ்ளோ செல்வாக்கு.. ஆனாலும் சூர்யா, கார்த்தி ரிக்‌ஷா-ல SCHOOL போனாங்க" - விருமன் விழாவில் பாரதிராஜா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி மற்றும் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விருமன். இப்படத்தில் இவர்களுடன் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ், கருணாஸ், சூரி, வடிவுக்கரசி, சிங்கம்புலி, மனோஜ் பாரதிராஜா, ராஜ்குமார், இந்துமதி, வசுமித்ரா, நந்தினி, ஹலோ கந்தசாமி, வேல்முருகன், TSR, ஓ.ஏ.கே.சுந்தர், ரிஷி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

Bharathirajaa about Sivakumar Suriya Karthi viruman audio launch

இயக்குநர் முத்தையா உடன் முதன் முறையாக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இப்படத்தில் இணைகிறார். S.K.செல்வகுமார் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அனல் அரசு ஸ்டன்ட் காட்சிகளை இயக்கியுள்ளார். இப்படத்தினை தமிழகம் முழுவதும் சக்தி பிலீம் பேக்டரி நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது.

மதுரை, தேனி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் இந்த படத்தின் படபிடிப்பு 60 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இப்படத்தின் கஞ்சா பூ கண்ணால பாடல் ரிலீஸ் ஆகி ஹிட் ஆனது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரை மாநகரில் நடந்தது, படத்தின் டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இவ்விழாவில் பேசிய இயக்குநர் இமயம் பாரதிராஜா, “சிவகுமாரை போல் ஒழுக்கத்தை கற்றுத் தந்தவர்கள் யாரும் இல்லை. நான் உதவி இயக்குனராக இருக்கும் பொழுது சிவக்குமாரை இயக்கியிருக்கிறோம்.

அப்போதெல்லாம் திருமணமே செய்து விட்டார். அவருக்கு இப்படி இரண்டு பிள்ளைகள் வளர்வார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. இரண்டு பேருமே என் நான்காம் தலைமுறை பிள்ளைகள்.. என் வீட்டில் தான் விளையாண்டு கொண்டிருப்பார்கள்.

ஒழுக்கத்தை சிறுவயதில் இருந்தே கற்றுக் கொடுத்தவர் சிவகுமார். அவர் கிரேட் மேன். அத்தனை செல்வாக்கு இருந்த காலகட்டத்திலேயே பள்ளி செல்வதற்கு சூர்யா மற்றும் கார்த்திக்கு சிவகுமார் கார் கொடுக்க மாட்டார். பள்ளிக்கு ரிக்ஷாவில் தான் அனுப்புவார். அத்தகைய அவருடைய ஒழுக்கம்தான் கடவுள் அவருக்கு இப்படி இரண்டு பிள்ளைகளை கொடுத்திருப்பதற்கு காரணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Bharathirajaa about Sivakumar Suriya Karthi viruman audio launch

People looking for online information on Aditi Shankar, Bharathiraja, Karthi, Sivakumar, Suriya, Viruman, Viruman Bharathirajaa speech, Yuvan Shankar Raja will find this news story useful.