சீரியல் நடிகை ஃபரீனா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் முக்கியமானவர். அவர் தமது கர்ப்பகால போட்டோ ஷூட் புகைப்படங்களை அண்மைக் காலமாகவே தமது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ஷேர் செய்து வருகிறார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஃபரீனா. இவர் வெண்பா எனும் கதாபாத்திரமாக மிகவும் பிரபலம். இந்த சீரியலில் கண்ணம்மாவின் கணவரான பாரதி, கண்ணம்மாவின் மீதான சந்தேகத்தால் அவரை பிரிந்து வாழ்கிறார்.
அதற்கு காரணமே வெண்பா கேரக்டர் தான். இதனிடையே பாரதி & கண்ணம்மா இருவருக்கும் பிறந்த இரு குழந்தைகளுள் லக்ஷ்மி கண்ணம்மாவிடமும், ஹேமா பாரதியிடமும் வளருகிறார்கள்.
இந்நிலையில் எப்படியாவது பாரதியை திருமணம் செய்தே தீரவேண்டும் என்கிற நோக்கத்தில் பல வில்லத்தனங்களை வெண்பா செய்து வருகிறார். வெண்பா கேரக்டரில் நடிக்கும் ஃபரினா, தான் கர்ப்பமாக இருக்கும் போதும் கூட, அதை லாவமாக மறைத்தவாறு உடையணிந்து இந்த சீரியலில் நடிக்கும் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்நிலையில் தான் நடிகை ஃபரினா, தான் கர்ப்பமாக இருக்கும் இந்த சூழலிலும், சிவப்பு நிற உடை அணிந்து நீச்சல் குளத்தில் நீருக்கு அடியில் மூழ்கி இருந்தவாறும், மஞ்சள் நிற ஆடையில் பாத் டப்பிலும், பேபி பம்ப் தெரியும் வகையில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அவரது தமது இந்த புகைப்படங்களை தமது வலைப்பக்கங்களில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.