விஜய் டிவி, 23, பிப்ரவரி, 2022: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி - கண்ணம்மா சீரியல் பெருவாரியான ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுவரும் சீரியலாக விளங்கி வருகிறது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணமா இருவரும் 9 வருடங்களுக்கு மேலாக பிரிந்து வாழ்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.
இரு குழந்தைகள்
இதில் இவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் இருவரிடமும் தனித்தனியே வளர்ந்து வருகின்றனர். அதில் கண்ணம்மாவிடம் லட்சுமி நேரடி மகளாகவும், பாரதியிடம் ஹேமா ஆதரவற்ற குழந்தையாகவும் வளர்ந்து வருகிறார்கள். இதனிடையே இரண்டு குழந்தைகளும் தாங்கள் பெற்ற குழந்தைகள் தான் என்பது பாரதியை தவிர அனைவருக்குமே தெரியும்.
கண்ணம்மாவின் வாக்கு
பாரதி மட்டுமே ஹேமா ஆதரவற்ற குழந்தை என்று நினைத்துக்கொண்டு வளர்த்து வருகிறார். இதனிடையே கண்ணம்மாவின் மகள் லட்சுமி கேட்டுக்கொண்டதற்கு இணங்க கண்ணம்மா தன்னுடைய பிறந்த நாளன்று லட்சுமியின் தந்தை யாரென்று கூறுவதாக வாக்கு கொடுத்திருந்தார். இந்த வாக்கை காப்பாற்ற வேண்டுமென்றால் அந்த பிறந்தநாளுக்கு பாரதி வருகை தரவேண்டும். ஆனால் பாரதியை எவ்வளவோ முறை கண்ணம்மாவை கூப்பிட்டு பார்த்தும், “நீ என்னை பிறந்தநாளில் அழைத்து, நான் தான் உன் குழந்தைக்கு அப்பா என்று பொய் சொல்லி அசிங்கப்படுத்துவதற்கு நான் ஏன் வரவேண்டும்?” என்று விடாப்பிடியாக மறுத்து முரண்டு பிடித்து வந்து முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்.
ரகசியம்
ஆனால் கண்ணம்மாவோ, பாரதி அங்கு வந்தால் ஒரு ரகசியம் சொல்வதாக கூறியதை அடுத்து பாரதி கொஞ்சம் யோசித்துக் கொண்டிருந்தார். அப்போது வெண்பாவும் அவள் என்னதான் ரகசியம் சொல்கிறாள் என்று பார்ப்போம் என்று சொல்லி பாரதியை ஊக்குவித்து அந்த பிறந்தநாள் நிகழ்வுக்கு பாரதியை அழைத்து வருவதற்காக மூளை சலவை செய்தார். இப்படி பாரதியும் ஏதோ ஒரு நினைப்பில் கண்ணம்மாவின் பிறந்தநாளை அட்டெண்ட் பண்ணுவதற்காக ஹேமாவை அழைத்துக் கொண்டு வர, அங்கு கண்ணம்மாவின் பிறந்தநாளுக்கு தடபுடலான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தார் கண்ணம்மாவின் மகள் லட்சுமி. அத்துடன் தன்னுடைய அப்பாவுக்கு வருக வருக என்று வெல்கம் பேனர்களை எல்லாம் வைத்திருந்தார். இதைப் பார்த்து பார்த்து ஆச்சரியப்பட்டார் பாரதி. வந்தவர் கண்ணம்மாவை தனியே அழைத்து, “ஏதோ ஒரு ரகசியம் சொல்ல வேண்டும் என்று சொன்னாயே.. அது என்னவென்று சொல்!” என்று கேட்டுவிட்டார்.
பாரதியின் ரியாக்சன்
கண்ணம்மாவின் மாமனார் மாமியார் அனைவருமே கண்ணம்மா ஹேமா தன் குழந்தை தான் என்பதை பாரதியிடம் சொன்னால் பிரச்சினை இன்னும் பெரிதாகி விடும் என்று பயந்து கொண்டிருந்தனர். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாது கண்ணம்மா பாரதியுடன் ஹேமா தன் குழந்தைதான் என்று போட்டு உடைத்துவிட்டார். இதற்கு பாரதியின் ரியாக்சன் என்னவாக இருக்கும் என்பதுதான் ஏறக்குறைய அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் பாரதியோ இதற்கு கொடுத்த ரியாக்சன் தான் அல்டிமேட்!
அப்போதே எனக்கு தெரியும்
ஆம், பாரதி சொன்ன பதில் என்னவென்றால், “நன்றாக தெரியுமே.. உனக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக ஏற்கனவே என்னிடம் வந்து கூறியிருந்தாய்.. அப்போதே எனக்கு தெரியும் என்றாவது ஒருநாள் அந்த இன்னொரு குழந்தை ஹேமா தான் என்று வந்து என்னிடம் கூறுவாய் என்று... இப்படி சொல்லி என்னையும் ஹேமாவையும் பிரிப்பதற்கான வேலையை நீ செய்கிறாய் என்பது எனக்கு தெரியும், அதையும் உனக்கு பிரசவம் பார்த்த என்னிடமே வந்து கூறுகிறாய் பார்த்தாயா!” என்று சொல்லி பாரதி கண்ணம்மாவை கலாய்த்த தள்ளிவிட்டார். மேலும் பேசிய பாரதி, இந்த பிறந்த நாளில் வைத்து லட்சுமியின் தந்தை நான்தான் என்று நீ கூறினால், லட்சுமியின் உண்மையான தந்தை வருண் தான் என்பதை நான் அவரிடம் சொல்லி விடுவேன்” என்று கண்ணம்மாவுக்கு கிடுக்குப் பிடி போட்டு விட்டார்.
மன்னிக்கவே மாட்டேன்
தொடர்ந்து பேசிய பாரதி, “என் அம்மா குழந்தை ஹேமாவை ஆதரவற்ற குழந்தை என்று சொல்லிதான் என் கையில் வந்து கொடுத்து வளர்க்கச் சொன்னார். ஒருவேளை அது உன் குழந்தையாக இருந்தால், அது என் அம்மா எனக்கு பெரிய செய்த துரோகம். அதற்காக அவரை வாழ்நாள் முழுவதும் நான் மன்னிக்கவே மாட்டேன்” என்று ஆவேசமாக கூற, தாய்க்கும் மகனுக்கும் இடையில் பிளவு உண்டாவதற்கு நாம் காரணமாகி விடக்கூடாது என்பதற்காக கண்ணம்மா ஒரு கணம் யோசித்து ஹேமா தான் தன் குழந்தை என்பதற்கான ஆதாரப்பூர்வ விஷயங்களை கூறி மேற்கொண்டு பேசுவதற்கு மறுத்துவிட்டார். இதனால் கண்ணம்மாவின் பிறந்தநாளில் லட்சுமியின் தந்தை பாரதி தான் என்பதை கூற கண்ணம்மா மறுத்துவிட, லட்சுமி அழ தொடங்குகிறார். அப்போது லட்சுமியை அழைத்துப் பேசும் பாரதி, “உனக்கு அம்மா அப்பா எல்லாமே இந்த கண்ணம்மா தான்!” என்று அவருடைய அம்மாவை காட்டி சொல்ல லட்சுமி ஓடிக் கொண்டு தன் அம்மாவை கட்டிக் கொண்டு அழுகிறார் லட்சுமி.
பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்துருக்கலாம்
இப்படி இவ்வளவு பெரிய விஷயத்தை மிக நீண்ட நாட்கள் காத்திருந்து, அனைவரையும் எதிர்பார்க்க வைத்து கண்ணம்மா போட்டு உடைத்துவிட்டார், இதனால் கண்ணம்மாவின் தரப்பினருக்கும், பாரதியின் பெற்றோர் மற்றும் கண்ணம்மாவின் அப்பா எல்லாருக்குமே அதிர்ச்சி. அவர்கள் பயந்து கொண்டு இருந்தனர். ஆனால் பாரதி இவை எல்லாவற்றையும் சுக்குநூறாக உடைத்து தள்ளிவிட்டார். இதை பார்க்கும் ரசிகர்கள், “இந்த உண்மையை சொல்லியும் பாரதிக்கு ஏறவில்லை, இதற்குப் பேசாமல் இந்த உண்மையைச் சொல்லாமல் இருந்திருக்கலாம்.. அதாவது பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்துருக்கலாம்!” என்று கலாய்த்து வருகின்றனர்.