விஜய் டிவியில் மிகப் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் பாரதியும் கண்ணமும் திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கண்ணம்மா கர்ப்பமாகிறார். வெண்பா செய்த சூழ்ச்சியால், பாரதி தனக்கு ஆண்மை இல்லை எனவும், கண்ணம்மாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை தன்னுடையது அல்ல எனவும் கோபப்படுகிறார். இதனால் கண்ணம்மா கோவித்துக் கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
இதனிடையே கண்ணம்மாவிற்கு தனது பிறந்தது இரட்டைக் குழந்தைகள் எனவும் அதில் ஒரு குழந்தை பாரதியிடம் வளர்கிறது எனவும் தெரிய வருகிறது. ஆனால் பாரதி ஹேமா மீது அதிக பாசம் வைத்திருப்பதால், குழந்தையை பாரதியிடம் கேட்காமல் இருக்கிறார் கண்ணம்மா. பாரதிக்கு இந்த விஷயம் தெரிந்தும் ஹேமா மீது உள்ள பாசத்தால் கண்ணமாவிடம் கொடுக்க மறுக்கிறார். இந்நிலையில் வெண்பா பலமுறை பாரதியை திருமணம் செய்ய திட்டமிடுகிறார். ஆனால் அதெல்லாம் முடியாமல் போகிறது. வெண்பா வேறு ஒருவரையும் திருமணம் செய்து கொள்கிறார்.
பாரதி லட்சுமி மற்றும் ஹேமாவின் ரத்த மாதிரியை எடுத்துக்கொண்டு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்க டெல்லிக்கு அனுப்பி வைக்கிறார். அதன் முடிவு பாரதி தான் லட்சுமி மற்றும் ஹேமாவின் அப்பா என்ன தெரிய வருகிறது. இதனால் பாரதி கண்ணமாவிடம் மன்னிப்பு கேட்கிறார். ஆனால் கண்ணம்மா அந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன் அப்பாவின் ஊருக்கு சென்று விடுகிறார். அவருடன் அவரது அப்பாவும் செல்ல, பின்னாடியே கண்ணம்மாவை சமாதானப்படுத்த பாரதியும் அதே கிராமத்தில் கண்ணம்மாவின் எதிர் வீட்டில் வசித்து வருகிறார். இதனிடையே கண்ணம்மா கேட்டபடி பாரதி விவாகரத்தும் கொடுக்க, கோர்ட்டில் அப்படியே தீர்ப்பும் ஆனது.
இதனிடையே ஊரில் மசாலா அரைத்து கடைகடையாக விற்று தன் 2 பெண் பிள்ளைகளையும் வளர்த்து வருகிறார் கண்ணம்மா. ஆனால் அந்த ஊரின் நாட்டாமை மகனுக்கு, கண்ணம்மாவால் தன் மசாலா கம்பெனிக்கு நஷ்டம் ஏற்படுவதால், கண்ணம்மாவை தன் பார்ட்னர் ஆக்கிக் கொள்ள முயற்சி செய்கிறார். இதனால் நாட்டாமையின் மகன் கண்ணமாவிடம் சென்று தவறாக பேசி அவளை பார்ட்னராக்க முயற்சித்தார். இதனால் கோபமடைந்த கண்ணம்மா அவரது கன்னத்தில் ஒரு அடி அடிக்க, இதனால் கோபம் அடைந்த நாட்டாமையின் மகன் கண்ணமாவுக்கும் தனக்குமான உறவு பற்றி ஊர் முழுக்க அவதூறு பரப்பி விட்டார்.
இந்த விஷயம் பாரதிக்கும் கண்ணம்மாவுக்கும் தெரிய வருகிறது. உடனே நாட்டாமையின் மகனை சந்திக்க பாரதியும் கண்ணமாவும் மிகுந்த கோவம் அடைந்து அவரை பார்க்க செல்கின்றனர். அங்கு ஊர் திருவிழாவிற்காக குஸ்தி போட்டி நடந்து கொண்டிருக்கிறது. அந்த குஸ்தி போட்டியில் நாட்டமையின் மகன் பலரையும் அடித்து கம்சன் செய்து கொண்டிருக்கிறார். அங்கு சென்ற கண்ணம்மா நாட்டாமை மகனுக்கு ஆண்மை இல்லை எனவும், தன் மீது அவர் ஆசைப்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் அவரால்தான் எதுவுமே பண்ண முடியாது என ஊர் மக்கள் முன்பு சொல்லிவிட்டார்.
இதனால் நாட்டாமை மகன் பாண்டியின் முகத்திரை கிழிகிறது. ஆனாலும் நாட்டாமையின் மகன் மன்னிப்பு கேட்க மறுக்க, உடனே பாரதி பாண்டியுடன் குஸ்தி போட்டியில் களம் இறங்குகிறார். இதில் பாண்டி வீழ்ச்சி அடைந்தால் பாண்டி மன்னிப்பு கேட்டாக வேண்டும் என்கிற நிபந்தனையுடன் இந்த போட்டி நடக்கிறது. இதில் பாரதி ஜெயித்ததால் பாரதியை பாண்டி பின்னந்தலையில் அடிக்க, அவர் நினைவிழந்துவிட்டார்.
ஆம், பாரதிக்கு குடும்பத்தினரையும், கண்ணம்மா உட்பட யாரையும் அடையாளம் தெரியவில்லை. அதன் பின்னர் மருத்துவர் பாரதியின் ஆழ்மனதில் கண்ணம்மா பெயர் ஆழமாக பதிந்திருக்கிறது, ஆனால் கண்ணம்மாவை நேரில் பார்க்கும்போது அவருக்கு யார் என்று தெரியவில்லை, எனினும் பாரதிக்கு பழைய நினைவுகள் வரவேண்டும் என்றால் கண்ணம்மா தான் உதவி செய்ய வேண்டும் மீண்டும், அவர்கள் இருவரும் இணைந்து வாழ வேண்டும், கண்ணம்மா பாரதியுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். முடிந்தால் பாரதியின் பழைய நாட்களுக்கு, அதாவது கண்ணம்மாவை பாரதி காதலித்த நாட்களுக்கு சென்று பழைய காட்சிகளை மீண்டும் ரீகிரியேட் செய்தால், பாரதியின் பழைய எல்லா நினைவுகளும் அவருக்கு நினைவுக்கு கொண்டு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என கூற அதற்கு கண்ணம்மாவோ தன்னால் முடியாது என முதலில் கூறுகிறார்.
பிறகு அனைவரும் கெஞ்சியதால் இதற்கு கண்ணம்மா சம்மதித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் வெளியான புதிய ப்ரோமோவில் பாரதிக்கு பழைய நினைவுகளை கொண்டு வருவதற்காக கண்ணம்மா பழைய நாட்களில் இருந்தது போலவே பாவாடை தாவணி கட்டிக்கொண்டு, சில பெண்களுடன் குளத்தங்கரையில் உள்ள படிக்கட்டுகளில் கையில் விளக்குகளை ஏந்தி கொண்டு படிக்கட்டுகளில் இறங்கி வந்து குளத்தில் விளக்குகளை விடுகிறார். அந்த ஆற்றங்கரை படிக்கட்டில் பாரதி அமர்ந்திருக்கிறார். கண்ணம்மா விளக்கை குளத்தில் விட்டு விட்டு படிக்கட்டு ஏறி வரும்போது பாரதி கண்ணம்மாவை பார்க்கிறார்.
கண்ணம்மாவும் பாரதியை பார்க்கிறார். இருவரும் ஒருவரை ஒருவர் குளக்கரையில் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது. கண்ணம்மா மீண்டும் பழைய நினைவுகளை பாரதிக்கு கொண்டு வரும் இந்த அத்தியாயம் இந்த சீரியலின் இறுதி அத்தியாயம் என்றும் ப்ரோமோவில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.