ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலின் சமீபத்திய எபிசோடில், பாரதி வெண்பாவை திருமணம் முற்பட்டதால் பாரதியின் குடும்பம் மற்றும் பாரதியிடம் வளர்ந்து வந்த குழந்தை ஹேமா அனைவருமே பாரதியை வெறுத்தனர். மேலும் வெண்பாவுக்கு ரோகித்துடன் திருமணம் நடந்து விட்டது. குழந்தை லட்சுமிக்கு ஏற்கனவே தனது அப்பா பாரதி தான் என்பதும், தன் தங்கை ஹேமா தான் என்பதும் தெரியும்.
இதனிடையே குழந்தை ஹேமா தான் ஒரு வளர்ப்பு பிள்ளை என்பதால் தன்னை ஆசிரமத்தில் கொண்டு விடச் சொல்லி அனைவரையும் வற்புறுத்த அப்போது கண்ணம்மா, "நீ எனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை தான். உன்னை யாரும் ஆசிரமத்தில் தூக்கிக் கொண்டு விட்டு விட்டார்கள்.
அதன் பிறகு உன்னை உன் தந்தை எடுத்து வளர்த்தார். மற்றபடி நான் தான் உன் அம்மா" என உண்மையை போட்டு உடைத்து விட்டார். மேலும் ஹேமாவை கடத்தி செல்லும் வெண்பா கும்பலிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் கண்ணம்மா ஈடுபட்டார்.
இன்னொரு பக்கம் பாரதியோ டி என் ஏ சாம்பிள்களை கொடுத்து விட்டார். ஹேமா & லெட்சுமி இருவரும் பாரதியின் குழந்தைகள் என ரிசல்ட் வந்து விட்டது. பாரதியின் சந்தேகங்கள் தீர்ந்துவிட்டது.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோ வீடியோவில், ஹேமா உயிரை மாய்த்துக் கொள்ள மாடியில் ஏறி, "என் அப்பா யாருன்னு சொன்னா தான் இறங்குவேன்" என கூறுகிறார். அந்த இடத்துக்கு வரும் பாரதி, நான் தான் உன் அப்பா, கண்ணம்மா தான் நான் தாலி கட்டிய மனைவி. ஹேமா, லெட்சுமி தான் என் குழந்தைகள்." என பாரதி எமோஷனலாக கூறுவது போல வீடியோ வெளியாகி உள்ளது.