நயன்தாரா நடித்த “O2” திரைப்படத்தின் வில்லன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read | குக் வித் கோமாளி அஸ்வின் - பிரபு சாலமன் இணையும் புதிய படம்! TITTLE எப்போ? மரண மாஸ் அப்டேட்
முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள “O2” திரைப்படத்தினை டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி பிரத்யேகமாக வெளியிடுகிறது. இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் விக்னேஷ் GS இயக்கியுள்ளார்.
தமிழில் தொடர் பிளாக்பஸ்டர் படைப்புகளைத் தந்து வரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், சமீபத்தில் வெளியான, இயக்குநர் தமிழ் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்த “டாணாக்காரன்” படம், விமர்சன ரீதியாகவும், ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த அதிரடி வெளியீடாக, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் “O2” திரைப்படத்தை, ரசிகர்களுக்காக பிரத்யேகமாக திரையிடவுள்ளது.
தமிழின் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில், இயக்குநர் விக்னேஷ் GS இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து தயாரித்திருக்கும் த்ரில்லர் டிராமா திரைப்படம் “O2”. படத்தைக் காண்போரின் இதயத்துடிப்பை எகிறவைக்கும் பரபரப்பான த்ரில்லராக இப்படம் உருவாகியுள்ளது.
ஒரு தாய் தன் 8 வயது மகனுடன் விபத்தில் சிக்கும் ஒரு பேருந்தில் மாட்டிக்கொள்கிறாள். நுரையீரல் பிரச்சனைக்காக எப்போதும் தன் மகனிடம் இருக்கும் ஆக்ஸிஜன் சிலிண்டரை பேருந்தில் சகபயணிகள் குறிவைக்க தன் மகனை அவள் எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் படம் தான் “O2”. தமிழ்நாடு , கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் தாய் பார்வதியாக நடிகை நயன்தாரா நடிக்க, மகனாக ரித்விக் நடித்துள்ளார். இவர்களுடன் லீணா, RNR மனோகர், ஆடுகளம் முருகதாஸ், ஜாஃபர் இடுக்கி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக பிரபல த்ரில்லர் படமான K13 படத்தின் இயக்குனர் பரத் நீலகண்டன் நடித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் விக்னேஷ் GS எழுதி இயக்கியுள்ள இப்படத்திற்கு, விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். தமிழ் A அழகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். செல்வா RK படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் SR பிரகாஷ் பாபு, SR பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8