www.garudavega.com

அதிர்ச்சி.. 4 தேசிய விருது வென்ற இயக்குநர் மரணம்.! புகழ்பெற்ற அவரது 8 படங்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல வங்காள மொழி டைரக்டர் தருண் மஜூம்தார் மரணம் அடைந்துள்ள செய்தி இந்தியா முழுவதும் உள்ள பல கலைஞர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Bengali director Tarun Majumdar dies his 8 films

Also Read | பேரனுடன் அமெரிக்காவில் T. ராஜேந்தர்.. கூட யார் இருக்கானு பாருங்க.. இணையத்தை கலக்கும் LATEST போட்டோ!

4 தேசிய விருது பெற்ற திரைப்படங்களின் இயக்குநர் தருண் மஜூம்தார் (tarun majumdar) 1990-ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.  வங்காள மொழி இயக்குனரான தருண் மஜூம்தார் இயக்கத்தில் கஞ்சேர் சுவர்கோ, நிமந்த்ரன், ஞானதேவத, ஆரன்ய அமர ஆகிய திரைப்படங்கள் நாடுபோற்றும் 4 தேசிய விருதுகளை அவருக்கு பெற்றுத்தந்தன.

இவை தவிர 'பலிகா பது', 'குஹேலி', 'ஸ்ரீமர் பிருத்விராஜ்', 'தாதர் கீர்த்தி' உள்ளிட்ட முக்கிய திரைப்படங்களையும் இவர் தன் வாழ்நாளில் இயக்கியுள்ளார். பொதுவாக ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினரின் போராட்டங்களை அழுத்தமான கதை சொல்லல் மூலம் குடும்ப படங்களாக கூறியவர்.

அவர்களி வாழ்க்கையை தழுவிய கதையம்சங்கள் மூலம் திரையில் தருண் மஜூம்தார் தாம் சொல்ல நினைக்கும் கருத்துக்களை கூறியதற்காகவும், தொடர்ச்சியான திரையுலக சாதனைக்காகவும் தருண் மஜூம்தார் 1990-ல் பத்மஸ்ரீ விருது பெற்றார். கடைசியாக  இவரின் இயக்கத்தில் 2018-ல் ‘அதிகார்’ என்கிற டாக்கு ட்ராமா திரைப்படம் வெளிவந்தது.

Bengali director Tarun Majumdar dies his 8 films

இந்தியா முழுவதும் இருக்கும் பலதரபட்ட இயக்குநர்களும் இவரது திரைப்படங்களை பின்தொடர்வதுண்டு. இப்படி இருக்க, சில தினங்களுக்கு முன்பு தான் தருண் மஜூம்தாருக்கு முதுமை காரணமாக உடல்நல குறைவு உண்டானது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொல்கத்தாவில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சிறுநீரக தொற்றும், இருதய பிரச்சனையும் கண்டறியப்பட்டு,  தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருப்பினும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந்ததாக தெரிகிறது.

பின்னர் சிகிச்சை பலனின்றி 92 வயதான தருண் மஜூம்தார் மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு அம்மொழித் திரையுலகினர் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் உள்ள திரைக்கலைஞர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  மேலும் இவர் இயக்கிய Chaowa Pawa (1959), Kacher Swargo (1962), Balika Badhu (1967), Shriman Prihviraj (1973,)Ganadevta (1978), Dadar Kirti (1980), Bhalobasha Bhalobasha (1985), Aalo (2003) ஆகிய திரைப்படங்கள் குறித்து அவரது ரசிகர்கள் இப்போது இணையதளத்தில் பேசி வருகின்றனர்.

Also Read | சிவாங்கியின் ‘ரஜினி கெட்டப்’ ரஜினி வரைக்கும் போயிடுச்சா.?.. CWC 3-ல் வித்யூலேகா சர்ப்ரைஸ்.!

மற்ற செய்திகள்

Bengali director Tarun Majumdar dies his 8 films

People looking for online information on RIPTarunMajumdar, Tarun majumdar, Tarun majumdar death, Tarun majumdar movies will find this news story useful.