www.garudavega.com

VANITHA MARRIAGE CONTROVERSY-க்கு முற்றுப்புள்ளி வைத்த BEHINDWOODS.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் Behindwoods தனது முடிவை அறிவித்துள்ளது. 

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் Behindwoods எடுக்கும் முடிவு | Behindwoods gives final statement on Vanitha Vijaykumar Marriage Controversy

அண்மையில் நடிகை வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், காவல்துறையில் புகாரளிக்க, இதுவே சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக்கானது. 

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் Behindwoods எடுக்கும் முடிவு | Behindwoods gives final statement on Vanitha Vijaykumar Marriage Controversy

இதனிடையே Behindwoods நிறுவனம், இதுகுறித்து முக்கியமான முடிவை அறிவித்துள்ளது. வனிதாவின் திருமணம் லீகல் பிரச்சனையான பிறகே, அதுகுறித்த செய்திகளை Behindwoods வெளியிட்டு வந்துள்ளது. மேலும் இது இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்கிற பொழுது, ஒரு பக்கம் சார்ந்து செய்திகள் வெளியாகிவிட கூடாது என்று Behindwoods அதீத கவனம் எடுத்துக்கொண்டது. 

மேலும் எலிசபெத் ஹெலன் கேட்டுக்கொண்டதால் மட்டுமே, அவரும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனும் பேசுமாறு ஏற்பாடு செய்தோம். அதே போல வனிதா கேட்டு கொண்டதன் காரணத்தின் மட்டுமே, அவரையும் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனுடன் பேச ஏற்பாடு செய்தோம். அவர்களுக்கு பேசி ஒரு புரிதலுக்கு வருவார்கள் என்ற நோக்கத்திலேயே அந்த பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் எதிர்ப்பாராத விதமாக, நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது. வனிதா அவர்களும் தனது நிதானத்தை மீறி தகாத வார்த்தைகளை பயன்படுத்திவிட்டார். 

இதையடுத்து இந்த வீடியோவை வெளியிட வேண்டாம் என நினைத்தோம். ஆனால், வனிதா அதை தனது யூடியூப் தளத்தில் வெளியிட போவதாக தெரிவித்தார். இது இரண்டு பேர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், ஒருதரப்பாக இது போய்விட கூடாது என்பதால் மட்டுமே, இந்த வீடியோவை வெளியிட்டோம். 

வனிதா விஜயகுமாரின் திருமண சர்ச்சைகளுக்கு பிறகு, இதுவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. வெறும் நெகட்டிவிட்டியே நிறைந்து இருக்கிறது. இந்த மாதிரி ஒரு விஷயம் நம் சேனலில் வேண்டாமே என பலர் எங்களிடம் கேட்டுகொண்டார்கள். இதை தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து எங்கள் குழுவுடன் பேசினோம். இதன் முடிவில், இனி இது சம்பந்தமான எந்த செய்தியோ, வீடியோவோ Behindwoods தளத்தில் வராது என உறுதியளிக்கிறோம். 

17 வருடங்களாக Behindwoods-க்கும் மக்களுக்கும் நல்ல பந்தம் இருந்து வருகிறது. அது இனிமேலும் தொடர்ந்து நீடிக்கும். நன்றி. 

VANITHA MARRIAGE CONTROVERSY-க்கு முற்றுப்புள்ளி வைத்த BEHINDWOODS.! வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வனிதா விஜயகுமார் விவகாரத்தில் Behindwoods எடுக்கும் முடிவு | Behindwoods gives final statement on Vanitha Vijaykumar Marriage Controversy

People looking for online information on Behindwoods, Peter Paul, Vanitha Vijaykumar will find this news story useful.