நடிகர் விஜய் நடித்து வரும் தளபதி65 படத்தின் பிரம்மாண்டமான இரண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்கும் தளபதி65 படத்துக்கு Beast என பெயரிடப்பட்டுள்ளது. இப்படி விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ஐ முன்னிட்டு வெளியான இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களுக்கு மிகப்பெரும் ட்ரீட்டாக அமைந்துள்ளது என்று சொல்லலாம்.
இந்நிலையில் ட்விட்டர் ஸ்பேஸில் பீஸ்ட் படக்குழுவினர் மற்றும் இயக்குநர் நெல்சன் திலீப்குமாருடன் தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி (டிடி) பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பற்றி விஜய் சார் என்ன சொன்னார் என கேட்க, “விஜய் சார். ஒன்னுமே சொல்ல மாட்டார். அமைதியாக பார்ப்பார். கவனிப்பார். அவருக்கு போஸ்டர் பிடித்தது. 2-வது முறை நான் மீண்டும் மீண்டும் கேட்கும் போது நல்லாருக்கு என்றார். நம்மை ஒரு குழப்பத்திலேயே வைத்திருப்பார். நான் மீண்டும் கேட்கும்போது நல்லாதான்யா இருக்கு! என்றார். ஆஃப் ஸ்கிரீனில் ஒரு அமைதியான ஒருவர். ரியாக்ஷன் குறைவாகத் தான் கொடுப்பார். பெரிதாக ரியாக்ட் செய்ய மாட்டார்.
அவருடைய ஷாஜகான், போக்கிரி படங்கள் எனக்கு பிடிக்கும். ஃப்ரண்ட்ஸ் படத்தில் விஜய் செய்த காமெடி மிகவும் பிடிக்கும். அவருடைய டைமிங். வடிவேலு தார் டப்பாவுக்குள் விழும் காமெடி பிடிக்கும். அந்த காமெடியில் வருவது போல தான் உண்மையில் விஜய் சார் சிரிப்பார் என்று அவரை நேரில் பார்க்கும் போது தான் அறிந்து கொண்டேன்.
விஜய் சாரை இயக்கும் போது, ரசிகன் என்பதை அடக்கி வைத்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் எடுக்கும் படம் அவருக்கும் சரியாக இருக்கணும், எனக்கும் நான் எடுக்க வேண்டியதை எடுக்க வேண்டும். அவருக்கும் பிடிக்க வேண்டும். நாம் அவரின் அமைதியை குலைக்காமல் இருக்க வேண்டும். அவ்வளவுதான்!” என ஜாலியாக பேசியுள்ளார்.