விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் பீஸ்ட்.
பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார், எடிட்டர் நிர்மல்குமார் எடிட்டிங்கை கையாள்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, டெல்லி, சென்னையில் நடைபெற்றது. பீஸ்ட் படம் சென்சார் செய்யப்பட்டு U/A சான்றிதழ் அளிக்கப்பட்டது.மேலும் படத்தின் நீளம் 155 நிமிடங்கள் என அறிவிக்கப்பட்டது. பீஸ்ட் படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமையையும் ஐங்கரன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
தெலுங்கில் விஜய் 66 படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு பீஸ்ட் படத்தை வெளியிடுகிறார். மலையாளத்தில் மேஜிக் ப்ரேம்ஸ் நிறுவனத்தினர் வெளியிடுகின்றனர். பீஸ்ட் படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ஜெயண்ட்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான திரைகளில் வெளியாகியுள்ளது.
குறிப்பாக பீஸ்ட் படத்தின் சென்னை நகரம், செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள திரையரங்குகள் எண்ணிக்கை வெளியாகி உள்ளது. சென்னையில் 23 திரையரங்குகளின், 71 திரைகளில், 313 காட்சிகள் போடப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு பகுதிகளில் 86 திரையரங்குகளின், 224 திரைகளில், 1184 காட்சிகள் போடப்பட்டுள்ளன. சென்னை நகரம் + செங்கல்பட்டு பகுதிகளில் செர்ந்து இன்று மட்டும் 109 திரையரங்குகளில், 295 திரைகளில், 1497 காட்சிகள் திரையிடப்படுகின்றன.