சென்னை: பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு நடிகை கனிகா ஆடிய நடனம் வைரலாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. மதுரையை சார்ந்த இவர் 5 ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார். பின் நடிகர் அஜித்துடன் வரலாறு (2006) படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம் ஆனார். ஆட்டோ கிராப், எதிரி படங்களிலும் நடித்துள்ளார்.
ஷங்கரின் அந்நியன், சிவாஜி, சச்சின் படங்களின் ஹீரோயின்களுக்கு டப்பிங் பேசியதும் கனிகா தான். மலையாளத்தில் மோகன்லால், ஜெயராம், சுரேஷ் கோபி, மம்முட்டி என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து புகழ் பெற்றவர். கடைசியாக தமிழில் விஜய் சேதுபதி நடித்த யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் நடித்து இருந்தார்.
நடிகை கனிகா தற்போது சன் டிவியின் எதிர் நீச்சல் மெகா தொடரில் தற்போது நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் கனிகாவும் ஒருவர். இந்நிலையில் பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை கனிகா செமயாக நடனம் ஆடி உள்ளார். கடற்கரை ரெசார்ட்டில் இந்த நடனத்தை கனிகா அரங்கேற்றி உள்ளார்.
இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்துள்ளனர்.
பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 125 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 'கோலமாவு கோகிலா' நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர். பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.