ஹாட்ஸ்டார் தளத்தில் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக பல சர்ச்சையான விஷயங்கள், பிக்பாஸ் வீட்டிற்குள் நடந்து வருகிறது.
"என்னடா சொன்னே.." நிரூப் பேசிய கொச்சை வார்த்தை..? கொதித்த ஜூலி.. சிம்புவிடம் fans கோரிக்கை
24 மணி நேரமும் நேயர்களால், பிக்பாஸ் நிகழ்ச்சியை கண்டுகளிக்க முடியும் என்ற போதும், போட்டியாளர்கள் அதனை எண்ணி கவலைப்படுவதாக தெரியவில்லை. மேலும், பல போட்டியாளர்களின் உண்மை முகத்தையும் மக்கள் இதனால் புரிந்து கொள்ள முடிகிறது.
போட்டி என்பதனை தாண்டி, மாறி மாறி கருத்து மோதல்கள் மற்றும் தனிநபர் தாக்குதல்கள் என தொடர்ந்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனிடையே, போட்டியின் பாதியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக வனிதாவும் விலகினார்.
சண்டை, சச்சரவுகள்
இன்னொரு பக்கம், ரம்யா பாண்டியன் உள்ளிட்ட சில புதிய போட்டியாளர்களும் உள்ளே வந்தனர். மிகவும் குறைவான நேரங்களில் மட்டும் ஒன்றாக இருக்கும் ஹவுஸ்மேட்கள், மீதமுள்ள நேரத்தில் சண்டை தான் போட்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்டிற்குள் அடிக்கடி சண்டை, சச்சரவுகள் வருவது வழக்கமான ஒன்றாக இருக்கலாம்.
விவாதிக்கும் ரசிகர்கள்
ஆனால், கடந்த சில நாட்களாக ஒரு புதிய விஷயம் தலையெடுத்து வருகிறது. சில தினங்களுக்கு முன், நிரூப்பிடம் பேசும் அனிதா, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இது தொடர்பான வீடியோக்கள், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக விவாதத்தை உண்டு பண்ணி இருந்தது.
பல குடும்பத்தினர் கண்டு களிக்கும் நிகழ்ச்சியில் இப்படியான வார்த்தைகளையா புதிய எபிசோடு ஒன்றில், ஜூலியை பார்த்து நிரூப்பும் கொச்சை வார்த்தை ஒன்றை பயன்படுத்தி இருந்தார்.
ரசிகர்கள் கோரிக்கை
அடிதடி, மோதல் என மற்ற அனைத்தையும் சகித்துக் கொள்ளலாம். ஆனால், இது போன்ற கொச்சை வார்த்தைகள் பேசுவது பற்றி, சிம்பு மற்றும் பிக்பாஸ் குழுவினர் நிச்சயம் நடவடிக்கை எடுத்து, இம்மாதிரியான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வழி செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
வார இறுதியில், நடிகர் சிம்பு வரவுள்ள நிலையில், அவர் நிரூப் மற்றும் அனிதா ஆகியோர் செயல் பற்றி என்ன சொல்ல போகிறார் என்பதையும் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
ஆக்ரோஷ சண்டை, தவறான வார்த்தை.. உங்களை கொன்னுடும்... BBUltimate வனிதா பரபரப்பு ட்வீட்