முதல் வாரம் ஹார்ட் டாஸ்க் போல நேற்று மாஸ்க் டாஸ்க் நடந்தது. இதில் யாரும் எதிர்பாராத விதமாக ஆரி, ரியோவுக்கு அதிக மாஸ்க்குகள் கிடைத்தன. இதனால் ரியோ லேசாக டென்சன் ஆனார். மேலும் கமலிடமும் அவர் இதுகுறித்து முறையிட்டார். மறுபுறம் ஆரியும் இதுகுறித்து கடைசியில் பேசினார். என்றாலும் இவ்வளவு மாஸ்க்குகளை அவர்கள் எதிர்பார்க்கவில்லை என்பது அவர்களின் பேச்சில் இருந்தே தெரிந்தது.
சுரேஷ், நிஷா, அனிதா, வேல்முருகன் ஆகியோருக்கு சொற்ப மாஸ்க்குகள் கிடைத்தன. அனைவரும் எதிர்பார்த்தது போல ரியோ, சுரேஷுக்கு மாஸ்க் வழங்கினார். இதேபோல சனம், அனிதா சம்பத்துக்கு மாஸ்க் வழங்கியதும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில் பாலாஜி முருகதாஸ் ஆரிக்கு மாஸ்க் அளித்தபோது சொன்ன விஷயம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.
First time,I'm agreeing with Balaji. What he said abt Aari is so true. He played a safe game by nominating Aajeedh and Gabriella. #BiggBossTamil4
— Taurean girl ^_^ (@taurianstings) October 18, 2020
வீட்டில் வந்த நாள் முதல் வயதில் சிறியவர்களான ஆஜித், ஷிவானி, கேப்ரியலா ஆகியோரை மட்டுமே அவர் நாமினேட் செய்வதாக அவர் காரணம் சொல்லி மாஸ்க் அளித்தார். இது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் அவருக்கு மாஸ்க் வழங்குவதாகவும் கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் சனம் கூட நீ சண்டை போடுறது தான் கொஞ்சம் எரிச்சலா இருக்கு தம்பி. மத்தபடி ஐ லைக் யூ என சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.