www.garudavega.com

'கன்னித்தீவு' மாதிரி நீண்டுட்டே போகுது... வரிசை கட்டி வளைத்து,வளைத்து 'அட்வைஸ்' மழை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் நகரம் சார்பாக பேசும்போது கிராமத்தில் கணவனை இழந்த பெண்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை என அனிதா சம்பத் கூறினார். அவர் சுரேஷை அதற்கு உதாரணமாக சொல்லி பின்னர் தன்னுடைய வாழ்க்கையையும் தெரிவித்து அந்த பேச்சை முடித்தார். ஆனால் அனிதாவின் பேச்சு சரியில்லை என சுரேஷ் பார்ப்பவர்கள் அனைவரிடமும் சொல்லி அடுத்த பஞ்சாயத்துக்கு திரி கொளுத்தி போட்டார்.

BB 4 Tamil: Nisha, Aari and Rio advised for Anitha Sampath

இதுகுறித்து அர்ச்சனாவிடம் தன்னுடைய ஆதங்கத்தை எடுத்துக்கூறிய அவர் அடுத்து சாப்பிட வர மாட்டேன் என அழிச்சாட்டியம் செய்தார். அவரை ரியோ உள்ளிட்டவர்கள் சமாதானம் செய்து சாப்பிட அழைத்து சென்றனர். அங்கும் சென்று கேபியிடம் எரிந்து விழுந்தார். இது ஒரு புறமிருக்க மறுபுறம் ரியோ, ஆரி, நிஷா ஆகியோர் நீ எப்படி உன்னுடைய வாழ்க்கையை இப்படி சொல்லலாம் வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? என அனிதாவுக்கு அட்வைஸ் செய்தனர்.

இந்த விவகாரத்தில் சனம் ஷெட்டி, ஷிவானி ஆகியோர் அனிதாவின் பேச்சில் தவறேதும் இல்லை என அவருக்கு சப்போர்ட் செய்தனர். நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களும் அனிதா பேசியது தவறாக இல்லை அவர் சொன்னவிதம் வேண்டும் என்றால் அப்படி இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த பஞ்சாயத்து தொடர்ந்து நீண்டு கொண்டே சென்றது அனிதா மன்னிப்பு கேட்கிறேன் என சொல்லி சுரேஷிடம் செல்ல, அவர் அனிதாவை கண்டுகொள்ளவே இல்லை.

இதனால் பிக்பாஸ் வீட்டில் இன்றும் இந்த பிரச்சினை எதிரொலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

BB 4 Tamil: Nisha, Aari and Rio advised for Anitha Sampath

People looking for online information on Suresh Chakravarthy will find this news story useful.