விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' தொடர், அடுத்தடுத்து சுவாரஸ்ய சம்பவங்களுடன் சென்று கொண்டிருப்பதால், ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.
“Meaner… leaner… stronger”… வீர ராகவனின் ஒன் மேன் ஷோ – Beast படத்தின் goosebumps டிரைலர்!
பராதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து இருக்கும் நிலையில், அவர்களின் குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர், முறையே பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோரிடம் தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
அப்படி இருக்கையில் தான், தன்னுடைய தந்தை யார் என்பதை கண்டுபிடிக்க களத்தில் குதித்த லட்சுமி, இறுதியில் பாரதி தான் தந்தை என்பதை, யாருடைய உதவி இல்லாமலும் கண்டுபிடிக்கிறார்.
இனிமே டாக்டர் அப்பா..
பாரதி தன்னுடைய தந்தை என்பது தெரிந்தது முதல், அவருடன் நேரத்தை கழிக்க தான் அதிகமாக பிளான் போட்டு வருகிறார் லட்சுமி. அது மட்டுமில்லாமல், பாரதியும் லட்சுமிக்கு தற்போது 'டாக்டர் அப்பா' என ஆகி விட்டார். அங்கிளை டாடி என அழைக்க ஆசைப்பட்டு, அதனை நிறைவேற்றியதும் லட்சுமி தான். இது மட்டுமில்லாமல், பாரதிக்காக வேண்டி, பல திட்டங்களை போட்டு அதனை செயல்படுத்தி வெற்றியும் கண்டு வருகிறார் லட்சுமி. இன்னொரு பக்கம், பாரதிக்கும் லட்சுமி மீது அதிக அன்பு வர ஆரம்பித்துள்ளது.
எச்சரிக்கும் பாரதி
இந்நிலையில், பிக்னிக் சென்ற இடத்தில், குழந்தைக்கு நேர்ந்த சம்பவம் ஒன்று, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகள் அனைவரும் சுற்றுலா சென்ற இடத்தில் நீரில் குளிக்க செல்ல, எச்சரித்து அனுப்புகிறார் பாரதி. மற்ற குழந்தைகளுடன் ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர் நீரில் விளையாடி கொண்டிருக்க, ஆழமான பகுதிக்கு சென்ற பந்தை எடுக்க வேண்டி லட்சுமி செல்கிறார். அப்போது, அவர்கள் அங்கே பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவருமே இல்லை.
தவித்து ஓடிய பாரதி
அந்த சமயத்தில், பந்தை எடுக்கச் சென்ற லட்சுமி, நீந்த முடியாமல் தத்தளிக்க, விஷயம் தெரிய வந்த பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், பதறியடித்து கொண்டு ஓடுகின்றனர். உடனடியாக, நீரில் குதித்த பாரதி, லட்சுமியை கரைக்கு கொண்டு வந்து, நீரை வெளியே எடுக்கிறார்.
லட்சுமி உயிர் பிழைத்ததுக் கொண்டதும் அங்கிருந்தவர்கள் நிம்மதி அடைய, "ரொம்ப தேங்க்ஸ் டாக்டர் அப்பா. லவ் யூ சோ மச்" என சொல்கிறார் லட்சுமி. மறுகணமே, லட்சுமியை கட்டியணைத்து அழ ஆரம்பிக்கிறார் பாரதி. தந்தை - மகள் என்பதை மாறி மாறி தெரிவித்து கொள்ளாமலே, இருவருக்குமான பிணைப்பு, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது.
"ஒரு ஸ்டைலான அம்மாவ கல்யாணம் பண்ணட்டுமா??.." கோபிக்கு 'மகள்' சொன்ன பதில்..