ஸ்டார் விஜய் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான பாரதி கண்ணம்மா, தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.
Also Read | சேனாபதியாக மாறும் முன் மிரட்டலான லுக்கில் கமல்ஹாசன்.. வெளியான இந்தியன்- 2 BTS ஃபோட்டோ!
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பிரிந்து வாழ தொடங்கி, அவர்களின் குழந்தைகள் தனித்தனியாக வாழ, பின்னர் அவர்கள் குறித்த உண்மையும் தெரிய வர இப்படி பாரதி கண்ணம்மாவில் வரும் ஒவ்வொரு நகர்வும் விறுவிறுப்பை கூட்ட தான் செய்தது.
அந்த வகையில், சமீபத்தில் அரங்கேறிய ஒரு விஷயம், உச்சகட்ட எதிர்பார்ப்பை மட்டுமில்லாமல் கடும் பரபரப்பிலும் பார்வையாளர்களை ஆழ்த்தி உள்ளது.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர் பணிபுரிந்து வரும் மருத்துவமனையை சில தீவிரவாதிகள் இணைந்து Hijack செய்து வைத்தனர். தீவிரவாதிகள் பிடியில மருத்துவமனையில் உள்ள ஊழியர்கள், மருத்துவர்கள், நோயாளிகள் தப்பித்த எபிசோட்கள் சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் பேசுபொருளாக மாறியது.
இந்நிலையில் வெண்பா, புதிய திட்டம் ஒன்றை தீட்டுகிறார். தன் வயிற்றில் வளரும் குழந்தையை பாரதியின் குழந்தை என நம்ப வைத்து, குழந்தை வளர்ந்த பிறகு பாரதியை திருமணம் செய்ய புதிய திட்டத்தை வெண்பா தீட்டுகிறார்.
அதன்படி பாரதியை சந்தித்து வயிற்றில் வளரும் குழந்தைக்காக தன் கழுத்தில் தாலி கட்ட வேண்டும் என அழுது வெண்பா கெஞ்சுகிறார். "ஊர் அறிய திருமணம் செய்யாமல் ஊருக்கு வெளியே ரகசியமாக கோயிலில் திருமணம் செய்தால் போதும்" என கூறுகிறார். "அதன் பிறகு உன் வாழ்க்கையில் நான் வரமாட்டேன்" என்கிறார் வெண்பா.
பாரதி இதை கேட்டு கோபமடைந்து "யாரோட குழந்தைக்கு யார் அப்பாவாகறது. இதெல்லாம் கனவுல கூட நடக்காது" என கூறி பாரதி சென்று விடுகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த வெண்பா, புதிய திட்டம் தீட்டி நாடகம் ஆடுகிறார். இந்த காட்சிகளுடன் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
Barathi - Am i a joke to you.. 😆
பாரதி கண்ணம்மா - இன்று இரவு 9 மணிக்கு நம்ம விஜய் டிவில #BarathiKannamma #VijayTelevision pic.twitter.com/c0HjQg9KWY
— Vijay Television (@vijaytelevision) September 28, 2022
Also Read | கொட்டும் மழையில்.. நண்பரின் பைக்கை மெக்கானிக்காக ரிப்பேர் பார்த்த அஜித்! சூப்பர் வீடியோ