விஜய் டிவியின் சீரியலான 'பாரதி கண்ணம்மா' அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது.
ராம் சரண் - Jr NTR செம மாஸ் நடனத்துடன் வெளியானது RRR படத்தின் கொண்டாட்ட பாடல் வீடியோ!
டாப் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த தொடருக்கு வாரா வாரம் கன்டென்ட் பஞ்சமும் இருப்பதில்லை.
பல திருப்புமுனைகள் மற்றும் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருவதால், அடுத்து என்ன ஆகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களையும் தொற்றிக் கொண்டுள்ளது.
பெரிய மாற்றம்
இந்நிலையில், பாரதி கண்ணம்மா தொடரில் அடுத்து ஒரு பெரிய மாற்றம் நடக்க போவது குறித்து அசத்தல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. முன்னதாக, பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், சந்தேகத்தின் பெயரில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், இந்த தம்பதியருக்கு பிறந்த குழந்தைகளில் ஒன்றான லட்சுமி, கண்ணம்மாவிடம் வளர்ந்து வருகிறார்.
வெண்பாவின் சதித் திட்டம்
இன்னொரு பக்கம், பாரதியிடம் வளரும் ஹேமாவை தத்துக் குழந்தை தான் என பாரதி நினைத்துள்ளார். அது நம்முடைய குழந்தை என கண்ணம்மா எடுத்துக் கூறிய போதும், பாரதி நம்ப தயாராகவில்லை. இந்த ஓட்டைகளை எல்லாம் பயன்படுத்தி, பாரதியை அடையத் துடிக்கிறார் வெண்பா.
கத்திக் குத்து
அப்படி இருக்கையில் தான், திருடன் ஒருவனிடம் இருந்து பாரதியை காக்க முயற்சித்து கத்திக் குத்து வாங்குகிறார் கண்ணம்மா. இதனைக் கண்டதும் பதறித் துடிக்கும் பாரதி, உடனடியாக ரத்த காயத்துடன் இருக்கும் கண்ணம்மாவைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். இதனைக் கண்டு கொண்டே இருக்கும் வெண்பாவின் முகமே மாறி போகிறது.
ரசிகர்கள் கருத்து
தொடர்ந்து, பாரதி மற்றும் வெண்பா ஆகியோருக்கு இடையே சண்டை வர, கண்ணம்மா பற்றி ஹேமாவும் தந்தையிடம் பேச, அடுத்தடுத்து புதிய திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. இதனால், பாரதி கண்ணம்மா தொடரில் மிகப் பெரிய திருப்பம் ஒன்று நிகழ போகிறது என்றே ரசிகர்கள் அனைவரும் கருதி வருகின்றனர்.
இன்ஸ்டா ஸ்டோரி
அதனை உண்மை ஆக்கும் வகையில் தான், ஒரு தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஹேமா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வரும் லிஷா என்ற குழந்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அடுத்த கதைக்களத்திற்கு நகரம் பாரதி கண்ணம்மா. பெற்றோருக்கு திருமணம் செய்ய முடிவு எடுக்கும் ஹேமா. லக்ஷ்மியின் முடிவு என்ன?" என காகிதம் ஒன்றில் எழுதி வைத்துள்ள புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இதனை பாரதி கண்ணம்மா தொடரின் Executive Producer ஒருவர் பகிர்ந்துள்ளார். பல நாட்களாக பிரிந்து வாழ்ந்து வரும் பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், தங்களின் குழந்தைகளின் காரணமாக ஒன்றிணைய போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
காஜல் அகர்வால்.. பெரிய நிறுவனத்துக்காக.. நிறைமாத கர்ப்பத்துடன் போட்டோ ஷூட்.. வீடியோ