விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் மிகவும் பிரபலமான தொடர்களில் ஒன்றாகும்.
அப்படி ஒரு சூழலில், தற்போது அடுத்தடுத்து பரபரப்பான காட்சிகளாக பாரதி கண்ணம்மா தொடர் சென்று கொண்டிருக்கிறது.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு, பிறந்த இரண்டு குழந்தைகளான ஹேமா மற்றும் லட்சுமி ஆகியோர், தனித்தனியாக தந்தை மற்றும் தாயுடன் வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, பாரதி மருத்துவராக பணிபுரியும் மருத்துவமனையில் வேலைக்கு செல்கிறார் கண்ணம்மா.
பாரதி மற்றும் கண்ணம்மா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதால், அவர்கள் இருவரும் தொடர்ந்து பிரிந்து தான் வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையே பாரதியை அடைய வேண்டும் என பல்வேறு திட்டங்களையும் தீட்டி வருகிறார் வெண்பா. அப்போது தான், வெண்பாவின் ஜோடி என்னும் கதாபாத்திரத்தில் ரோஹித்தும் என்ட்ரி கொடுக்கிறார்.
ஆனாலும், அவரை ஒதுக்கி வைத்து விட்டு பாரதியை அடைய வேண்டும் என்பதில் தான் தீவிரமாக இருக்கிறார் வெண்பா. அதே போல, இத்தனை நாட்கள் கண்ணம்மாவுடன் வாழ்ந்து வரும் லட்சுமி தனது மகள் இல்லை என்பதில் நம்பிக்கையுடன் இருந்த நிலையில், தற்போது டிஎன்ஏ டெஸ்ட் எடுத்து மகள் தானா என்பதை அறிந்து கொள்ளவும் பாரதி தயாராகி விட்டார்.
ஒருவேளை அவருக்கும் லஷ்மி மற்றும் ஹேமா ஆகிய குழந்தைகளுக்கும் டி என் ஏ டெஸ்ட் மேட்ச் ஆகவில்லை என்றால், வெண்பா கழுத்தில் தாலி கட்டவும் பாரதி உறுதிமொழி எடுத்துள்ளார். இப்படி பல்வேறு பரபரப்பான திருப்பங்கள் பாரதி கண்ணம்மா தொடரில் அரங்கேற, பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா பற்றிய காட்சிகளும் உள்ளே வருகிறது.
ஹேமாவின் அம்மாவாக பிரபல ராஜா ராணி சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் போட்டோ காட்டப்படுகிறது. அத்துடன் ஆல்யா மானசா, ‘மறைந்த’ ஒரு கேரக்டராக காட்டப்படுகிறார். அவருடைய ஃபோட்டோவை காட்டித்தான், குழந்தை ஹேமாவிடம் ‘அம்மா’ என்று சொல்லி வைத்திருக்கிறார் பாரதி.
அப்படி ஒரு சூழ்நிலையில், இன்னும் விறுவிறுப்பை ஏற்படுத்தக் கூடிய வகையிலான ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாரதிக்கு அழைக்கும் வெண்பா, "நீ என் கழுத்தில் தாலி கட்டும் நேரம் எப்போது வரும் என காத்துக் கொண்டிருக்கிறேன்" என்கிறார். இதனைக் கேட்டதும் பாரதிக்குள் பதற்றம் உருவாக, மறுபக்கம் டிஎன்ஏ ரிப்போர்ட் எப்போது வரும் என்றும் பாரதி கேட்க, நாளை மாலை வரும் என்றும் நபர் குறிப்பிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து, வெண்பாவின் திருமண நாளும் வந்து அதற்கான ஏற்பாடுகளும் ஜோராக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனால், பாரதி வெண்பாவை திருமணம் செய்வாரா அல்லது டிஎன்ஏ ரிப்போர்ட் அவருக்கு சாதகமாக வருமா என்பதை அறிந்து கொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்திருந்து வருகின்றனர்.