நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் இயக்குனர் கோபிசந்த் மலினேனியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான #NBK107 படத்திற்கு வீர சிம்ஹா ரெட்டி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கர்னூலில் உள்ள கொண்டா ரெட்டி கோட்டையில் 3டி வடிவில் டைட்டில் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டனர்.
வீர சிம்ஹா ரெட்டி மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னருக்கு பொருத்தமான தலைப்பு. சுவாரஸ்யமாக, பாலகிருஷ்ணாவின் ‘சிம்ஹா’ என பெயர் கொண்ட படங்கள் எல்லாம் பெரிய பிளாக்பஸ்டர்களாக அமைந்துள்ளது.
Here's the motion poster of #VeeraSimhaReddy 🔥🔥
Sankranthi 2023🌋
NATASIMHAM #NandamuriBalakrishna @megopichand @shrutihaasan @OfficialViji @varusarath5 @RishiPunjabi5 @MusicThaman pic.twitter.com/dgUy2GMfsb
— Mythri Movie Makers (@MythriOfficial) October 21, 2022
லுங்கி அணிந்தூ பாலகிருஷ்ணா பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு ஆயுதத்துடன் மைல்கல் மேல் கால் வைத்து நிற்பது போல் போஸ்டர் அமைந்துள்ளது மற்றும் புலிச்சேர்லா 4 கிமீ என மைல்கல்லில் எழுதப்பட்டுள்ளது. டைட்டில் லோகோவில் கர்ஜிக்கும் சிங்கத்தைக் காணலாம்.
இந்த படத்தை புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. கன்னட நடிகர் துனியா விஜய் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
எஸ் தமன் இசையமைப்பு செய்ய, ரிஷி பஞ்சாபி ஒளிப்பதிவு செய்கிறார். புகழ்பெற்ற எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதுகிறார், தேசிய விருது பெற்ற எடிட்டர் நவின் நூலி படத்தொகுப்பைக் கவனிக்கிறார் மற்றும் ஏஎஸ் பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ராம்-லக்ஷ்மண் சண்டை இயக்குனராகவும், இப்படத்தின் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராக சந்து ரவிபதி பணியாற்றுகின்றனர்.
வீர சிம்ஹா ரெட்டி 2023 ஆம் ஆண்டு மஹா சங்கராந்திக்கு (பொங்கல்) உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.