பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதலருடனான புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்! இவங்க சூப்பர் ஜோடி தான்
பிக்பாஸின் வெற்றியும் பிக்பாஸ் அல்டிமேட்டும்:
ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி ஐந்து சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த ஐந்து சீசன் நிகழ்ச்சிகளையும் உலகநாயகன் கமல்ஹாசன் தனது தனித்துவமான பேச்சாற்றலால் தொகுத்து வழங்கினார். இதனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரவேற்பை அடுத்து இப்போது 24 மணி நேரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் ஸ்ட்ரீம் செய்யப்பட்டு வருகிறது. இதில் கடந்த 5 சீசன்களில் கலந்துகொண்டு ரசிகர்களைக் கவர்ந்த போட்டியாளர்களே கலந்துகொண்டுள்ளனர். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார்.
கமலின் விலகலும் சிம்புவின் எண்ட்ரியும்:
ஆனால் இடையில் அவர் நடிக்கும் விக்ரம் படத்தின் வேலைகள் இருப்பதால், தன்னால் தன் கூட நடிக்கும் பிஸியான நடிகர்களான பஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோரின் நாட்கள் வீணாகக் கூடாது என்பதற்காகவும் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக இப்போது சிம்பு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தமாகி கடந்த வாரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருக்கு பிக்பாஸ் வீட்டு போட்டியாளர்கள் ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்தனர்.
பரபரப்பான கட்டத்தை எட்டும் பிக்பாஸ்:
பிக்பாஸ் கொடுக்கும் வித்தியாசமான டாஸ்க்குகளால் பரபரப்பான கட்டத்தை எட்டிவருகிறது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி. கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் நிருப்புக்கும் இன்னொரு போட்டியாளருக்கும் திருமணம் நடந்தது மற்றும் பாலாஜியிடம் அபிராமி கோபித்துக் கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிதா vs பாலாஜி
அதுபோலவே இப்போது வெளியாகி இருக்கும் புதிய ப்ரோமோவில் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி ‘நம்பர் 1 க்காக பேசுறேன், 3 வாரம் பெஸ்ட் பர்பாமன்ஸ் வாங்கி இருக்கேன், ஒரு வாரம் ட்ரெண்டிங் பிளேயர் வாங்கி இருக்கேன். ஒருவாரம் கேப்டனா இருந்திருக்கேன். ’ எனக் கூறுகிறார். அதற்கு பதிலளிக்கும் மற்றொரு போட்டியாளர் அனிதா சம்பத் ‘ட்ரெண்ட்டிங் பிளேயரா எப்படி வந்தன்னு தெரியும். அது நெகட்டிவ்வா ட்ரண்ட் ஆயிருக்கலாம். பாசிட்டிவ்வாவும் ட்ரண்ட் ஆயிருக்கலாம்.’ என கூறுகிறார். இப்படி இருவரும் காரசாரமாகப் பேசிக் கொண்டே செல்ல மற்ற ஹவுஸ்மேட்கள் அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டு நிற்கின்றனர். ஒரு கட்டத்தில் பாலாஜி ‘உங்களுக்கென்ன என்ன பிரச்சன. உக்காந்து பேசுவோம் வாங்க’ என சமாதானம் செய்வது போல பேசுகிறார். இந்த ப்ரோமோ வெளியானதி இருந்தே இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கோவிட்டுக்கு முன்… கோவிட்டுக்குப் பின்… மீண்டும் மருத்துவமனையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!