www.garudavega.com

VIDEO: 'ஆதாரத்துடன்' காத்திருக்கும் பாலாஜி... யாரெல்லாம் 'சிக்க' போறாங்கன்னு தெரியலயே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் ஆரி-பாலாஜி சண்டை போடாமல் இருந்தாலும் கூட ரியோ வாண்டட் ஆக சென்று சிக்கியதால், பிரச்சினைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. கடைசியில் நான் பேசுனது தப்புதான் எல்லாரும் என்ன மன்னிச்சிருங்க என ரியோ பெரிதாக ஒரு கும்பிடு போட்டு இந்த பஞ்சாயத்தை படாதபாடு பட்டு நிறுத்தினார்.

Balaji Murugadoss waiting for Right time, fans excited

தொடர்ந்து இதுகுறித்து பாலாஜி-சனம் இருவரும் தங்களது பேவரைட் இடத்தில் அமர்ந்து ஆலோசனை நடத்தினர். அப்போது பாலாஜி, சனத்திடம் எனக்கும் நெறைய கேக்க வேண்டி இருக்கு என சொன்னார். மேலும் பேப்பர் ஒன்றையும் எடுத்து காண்பித்தார். அதில் யார், யாரிடம் என்ன கேள்விகளை கேட்க வேண்டும். யாருடன் என்ன பஞ்சாயத்து என்பதை எல்லாம் விலாவரியாக எழுதி வைத்துள்ளார்.

மேலும் கிச்சனில் சம்யுக்தாவுடன் பேசும்போதும் நிஷா, சோம், ரமேஷ் ஆகியோர் தொடர்ந்து காப்பாற்றப்பட்டு  வருகின்றனர். இவர்கள் இப்படி செய்வதால் வேறு யாருக்கும்  வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை சொன்னார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஆஹா நமக்கு நல்ல எண்டெர்டெயின்மெண்ட் இருக்கு என, பாலாஜி முருகதாஸ்க்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Murugadoss waiting for Right time, fans excited

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.