பிக்பாஸ் வீட்டில் நேற்று சோமசேகர், ரம்யா பாண்டியன், ஆஜித், பாலாஜி முருகதாஸ் ஆகிய நால்வரும் தாங்கள் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டனர். இதில் பாலாஜியின் கதை ரசிகர்கள் அனைவரையும் உருக வைத்துள்ளது. வந்த நாள் முதல் எல்லாருக்கும் கவுண்டர் கொடுத்து ஜாலியாக திரிந்து கொண்டிருந்த பையனுக்குளை இப்படி ஒரு கதையா? என சக போட்டியாளர்களே உருகி போயினர்.
Bala❤️#BiggBossTamil4 #BiggBoss pic.twitter.com/p2RluV4WN0
— Naveen (@Naveen15091999) October 9, 2020
தன்னுடைய வாழ்க்கை குறித்து பாலாஜி, சின்ன வயசுல வீட்டுல இருக்கத சாப்பிட்டு ஸ்கூல் போயிருவேன். மதியம் சாப்பாடு வந்தா அது எனக்கு லாட்டரி பிரைஸ் மாதிரி தான். ஸ்கூல்ல தான் நான் சாப்பிடாம இருக்கத பார்த்து ஏதாவது வாங்கி தருவாங்க. அம்மா-அப்பா ரெண்டு பேருக்கும் குடிப்பழக்கம் இருந்தது. திடீர்னு நடுராத்திரில என்ன தொரத்தி, தொரத்தி அடிப்பாரு.
ஒரு மாற்றத்துக்காக ஜிம் போனேன். 45 டேஸ்ல சிக்ஸ்பேக் வந்தது. மிஸ்டர் இந்தியா, மிஸ்டர் இன்டர்நேஷனல் கலந்துட்டு வின் பண்ணேன். என் பேருக்கு பின்னால இருக்க முருகதாஸ் என்னோட அப்பா பேரு. அவரோட பேருக்கு என் பேரு ஐடெண்டிட்டி. நெறைய யூடியூப் வீடியோஸ்ல நான் இயக்குநர் முருகதாஸ் ரிலேஷன்னு போட்டு இருந்தாங்க. அந்த மாதிரி எதுவும் கெடையாது. இன்னைக்கு நான் போட்டு இருக்க ஷர்ட்ல இருந்து ஷூ வரைக்கும் என்னோட சொந்த காசுல வாங்குனது ,'' என உருக்கத்துடன் தெரிவித்தார்.
Seriously I dint think Bala would be this much emotional whn I 1st saw him in BB...
The way he grew up even after all these hardships...Hats off...A huge respect man...👏
U will have a great life ahead...❤#BiggBossTamil4 #BalajiMurugaDoss pic.twitter.com/giNg4JPweO
— ᴮᴱTαɾα 💫 💜JIMTOBER💜 (@Tara_star11) October 9, 2020
இதைப்பார்த்த ரசிகர்கள் இந்த பிக்பாஸ் டைட்டிலை நீங்க ஜெயிக்கணும் என அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்து இருக்கின்றனர். இதனால் பாலாஜி தற்போது வலிமையான பிக்பாஸ் போட்டியாளராக உருவெடுத்து இருக்கிறார்.