www.garudavega.com

VIDEO: இதயமா? இல்ல தலையா?... உங்களுக்கு ரொம்ப 'கஷ்டமா' இருந்துருக்குமே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் நாமினேஷனை சற்று வித்தியாசமாக அமைத்தார். டெலிகாலர் டாஸ்க்கை வைத்து தப்பித்த நபர்களை மீண்டும் அந்த லிஸ்டில் இணைத்து விட்டார். இதற்காக வரிசைப்படுத்தும் நிகழ்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த ஆரி, பாலாஜி, அர்ச்சனா (சனம் வெளியேறியதால் அர்ச்சனாவுக்கு வாய்ப்பு கிடைத்தது) ஆகியோரை தனித்தனியாக அழைத்தார். இதில் ஆரி, ஜித்தன் ரமேஷை நாமினேட் செய்தார்.

Balaji Murugadoss Indirectly attacks Archana in BB House

பாலாஜி, கேப்ரியலாவை நாமினேட் செய்தார். தொடர்ந்து சோம், ரியோ, ஆஜீத் மட்டுமே இதில் எஞ்சினர். வேறு வழியில்லாமல் அர்ச்சனா தன்னுடைய அன்பு கேங் மெம்பர் சோமை நாமினேட் செய்து தன்னை காத்துக்கொண்டார். இதையடுத்து வெளியில் வந்த அர்ச்சனா அதுகுறித்து எதுவும் பேசாமல் நிஷா, ரமேஷிடம் உரையாடிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த பாலாஜி உங்களுக்கு எப்படி இருந்துச்சு? என கேட்டார்.

இதயமா? இல்லை தலையா? எங்க குத்தி இருந்தாலும் கண்டிப்பா வலிக்கும். உங்களுக்கு தேர்வு செய்யுறது கஷ்டமா இருந்திருக்கும். என கொரோனா டெஸ்டை சொல்வது போல சொந்த கேங் மெம்பர்களை அர்ச்சனா நாமினேட் செய்ததை கிண்டலடித்தார். பதிலுக்கு அர்ச்சனாவால் எதுவும் சொல்ல முடியவில்லை. பின்னர் நிஷாவிடம் இதுகுறித்து ஆரி, பாலாஜி லிஸ்டில் இல்லை என அதனால் சோமை நாமினேட் செய்தேன் என அர்ச்சனா சொன்னது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Murugadoss Indirectly attacks Archana in BB House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.