இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த கோழி-நரி டாஸ்க் ஒருவழியாக தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இதைப்பார்த்து ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்களோ இல்லையோ நிச்சயம் பிக்பாஸ் நிம்மதியாக இருந்திருப்பார். இந்த டாஸ்க் அடிப்படையில் யார் அதிகமாக பணம் வைத்திருக்கிறார்கள் என அனைவரையும் அழைத்து பிக்பாஸ் கேட்டார்.
ஒவ்வொருவரும் தங்களிடம் உள்ள பணத்தின் மதிப்பை பொதுவாக அறிவித்தனர். முட்டையை உடைத்தாலும் கூட பாலாஜி தான் இந்த டாஸ்க்கில் அதிகம் பணம் சம்பாதித்து இருக்கிறார். 465 ரூபாய் அவர் வைத்திருப்பதாக சொன்னார். அதே நேரம் நேர்மையாக இந்த விளையாட்டை விளையாடிய ரியோவுக்கு பணம் எதுவும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#BiggBossTamil4#LuxuryTask... Highest money holder... #Bala... Well played & Wishes... 👏 His special power will told afterwards.. #Archana & #Bala selected as Best performers.. Wishes... 👏#RamyaPandian selected as Overall Best Performer... Wishes... 👏
— michael arun (@arunjeba) December 17, 2020
இதையடுத்து பாலாஜிக்கு ஏற்கனவே சொன்னது போல சூப்பர் பவர் ஒன்றை விரைவில் அளிப்பதாக பிக்பாஸ் அறிவித்துள்ளார். அநேகமாக அந்த சூப்பர் பவரை வைத்து யாரையாவது காப்பாற்றும் சக்தியை பிக்பாஸ் அளிக்கலாம் என கூறப்படுகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் அப்படி என்றால் நாமினேஷனில் இருக்கும் ஷிவானியை, பாலாஜி காப்பாற்றி விடுவார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.