டாஸ்க் ரொம்பவும் மொக்கையாக போனதால் பிக்பாஸ் தன்னுடைய வழக்கமான ஆயுதத்தை எடுத்தார். கண்டிப்பாக அடிச்சுக்குவாங்க ப்ரோமோ போட கண்டெண்ட் கிடைக்கும் என்பது தான் அவரது ஸ்ட்ரேட்டஜி ஆக இருக்கலாம். அது பலித்து விட்டது. வீட்டின் கேப்டனாக இருந்த அனிதாவை ஒர்ஸ்ட் பெர்பாமர் என சக போட்டியாளர்கள் தேர்வு செய்தனர்.
ரோபோக்களுக்கு அனிதா பெயர் வைத்தது பெரும் சர்ச்சையாக மாறியது. பதிலுக்கு அனிதா கேப்டன் பாலா சொல்லி தான் செஞ்சேன். அது டாஸ்க் என்று கூற அது சர்ச்சையாக வெடித்தது. நிஷாவும் ஐடியாக்களை வழங்கியதை அனிதா சொல்ல பெரும் போர்க்களமே உருவாகியது. நான் அர்ச்சனாவுக்கு bossy ரோபோ என வைக்க சொல்லவில்லை என்று நிஷா சொன்னார்.
Have to appreciate #Balaji for accepting "Naan dhaan sonnen"
That's the game and spirit... Kalakuda thambi#biggbosstamil #Biggbosstamil4 pic.twitter.com/Vm0IUrX6E0
— Imadh (@MSimath) December 10, 2020
இந்த சண்டையில் ஆளாளுக்கு கொஞ்சம் எண்ணெய் ஊற்றி கொளுந்து விட்டு எரிய செய்தனர். இந்த சண்டையை நிறுத்தும் உத்வேகத்துடன் பாலா தானே முன்வந்து நான் தான் அனிதாவை செய்ய சொன்னேன் என்றார். ஆனால் அது போதுமான பலனை அளிக்கவில்லை. என்றாலும் பாலா அனைவர் முன்பும் உண்மையை சொன்னது ரசிகர்களை கவர்ந்துள்ளது.