பிக்பாஸ் வீட்டின் முதல் நாளில் ஹார்ட் டாஸ்க்கால் சற்று நொந்து போயிருந்த ஷிவானிக்கு சக போட்டியாளர்களான ஆரி, பாலாஜி முருகதாஸ் ஆகியோர் ஆறுதல் சொல்லி தேற்றினர். இதில் ஆரியின் வார்த்தைகள் பக்குவமாக இருக்க, பாலாஜி நண்பனாக அவருக்கு ஆறுதல் சொல்கிறார். பாலாஜி-ஷிவானி இருவரும் அடிக்கடி வாக்கிங் சென்று தங்களை பற்றி பேசி வருகின்றனர்.
இதனால் பிக்பாஸ் வீட்டின் வழக்கமான காதல் ராசி இவர்கள் இருவருக்கும் பரவி விடுமோ? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் சீசனில் ஆரவ்-ஓவியா, 2-வது சீசனில் மஹத்-யாஷிகா, 3-வது சீசனில் கவின்-லாஸ்லியா காதல் ஜோடிகளாக மாறியது குறிப்பிடத்தக்கது. அதேபோல இந்த சீஸனின் காதல் ஜோடி யார்? என்று ரசிகர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து இருக்கின்றனர்.
Ok. Oru jodi ready
— Sathish (@actorsathish) October 6, 2020
இந்த நிலையில் நடிகர் சதீஷ், ''ஓகே. ஒரு ஜோடி ரெடி'' என சூசகமாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சொல்லி இருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் யாரு பாஸ் அது? என கேட்க, வேறு சிலரோ வேற யாரு ஷிவானி-பாலா தான் அது என அவருக்கு பதில் அளித்து வருகின்றனர். வேறு சிலரோ அப்போ ரெண்டு பேர் பேர வச்சு ஹேஸ்டேக் ஸ்டார்ட் பண்ணிடலாமா? என தங்களது ஐடியாக்களை அள்ளித்தெளித்து வருகின்றனர்.