பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஆயிரம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் பாலா இல்லை என்றால் இந்த சீசன் இவ்வளவு விறுவிறுப்பாக சென்று இருக்காது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மிக முக்கியமான போட்டியாளராக மாறியிருக்கிறார் பாலாஜி. ஆரம்பத்தில் அமைதியாக இருந்து, பின்பு இருந்து 'Simply waste' என்ற பட்டத்தை பெற்றவுடன் அவருக்கு போட்டியின் மீதான ஆர்வம் அதிகமாகியது. அதன் பிறகு பல அதிரடிகளை செய்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்.
இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் ரசிகர் ஒருவர் எழுதிய பதிவைப் பகிர்ந்து உள்ளார். "நீங்கள் பாலாஜியை ஏன் ஆதரிக்கிறீர்கள். அவர் மிகவும் ஆணவம் உடையவர். உங்கள் ஆதரவுக்கு தகுதியானவர் என்று நீங்கள் நம்புகிறீர்களா? உங்கள் கருத்து என்ன?" என்று கேள்விக்கு. அவரது ரசிகர் "அவர் மிகவும் உயர்ந்த மனிதர். எனக்கு அவரது குணம் மிகவும் பிடித்திருக்கிறது. மனதில் பட்டதை பேசுவதற்கு பயப்படவில்லை. ஐ லவ் பாலாஜி" என்று கூறியுள்ளார். இந்த பதிவை பகிர்ந்த பாலாஜி "அதற்குப் பெயர் ஆணவம் இல்லை பிரதர், தன்னம்பிக்கை. தன் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை.நான் நல்லவன்னு பெயர் வாங்க உள்ள போல. நான் பாலாவா இருந்தா உங்களுக்கு பிடிக்குமான்னு பார்க்க தான் போனேன். எனக்கு கிடைச்ச 6 கோடி வாக்குகள் தான் என்னுடைய கப். நான் நல்லவன் என்ற பதில் நீங்க சொல்லிட்டீங்க life-long அது ஒன்னு போதும்" என்று கூறியுள்ளார்.