இயக்குநர் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் திரையரங்கில் வெளியான நாச்சியார் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரபிக் குத்து Reels…. செம்ம ஆட்டம் போட்ட முன்னாள் CSK வீரர் – நெல்சன் பகிர்ந்த வீடியோ!
பாலாவும் சூர்யாவும்
திரையுலகில் சூர்யாவுக்கு முக்கியமான படமாக அமைந்த படம் நந்தா. விக்ரம் நடித்த சேது படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின்னர், இந்த படத்தை இயக்குனர் பாலா, இயக்கி இருந்தார். இந்த படத்தில் தன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சூர்யா. அது ரசிகர்களிடம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.
மீண்டும் இணைந்த பிதாமகன்
நந்தாவுக்குப் பிறகு பாலா சூர்யா - விக்ரமை வைத்து இயக்கிய படம்தான் பிதாமகன். நந்தாவுக்கு நேர் எதிரான நகைச்சுவை ததும்பும் பாத்திரத்தில் இந்த படத்தில் சூர்யாவை நடிக்க வைத்து அவரின் மற்றொரு பரிணாமத்தை வெளிக்கொண்டு வந்தார் பாலா. குறிப்பாக சூர்யா, ரயில் புடவை விற்கும் காட்சி மற்றும் லைலாவோடு லங்கர் கட்டை உருட்டும் காட்சி எல்லாம் இன்றளவும் பேசப்படும் ஒன்றாக அமைந்துள்ளது. அதன் பின்னர் பாலா தயாரிப்பில் சிங்கம்புலி இயக்கத்தில் மாயாவி படத்தில் நடித்தார் சூர்யா. இடையில் பாலா இயக்கிய அவன் இவன் திரைப்படத்தில் சூர்யா ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
மீண்டும் இணைந்த கூட்டணி
இந்நிலையில் பாலாவும் சூர்யாவும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் இப்போது படப்பிடிப்பை தொடங்க உள்ளனர். மதுரையில் வரும் 13 ஆம் தேதி (நாளை மறுநாள்) படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், அதற்காக சூர்யா 12 ஆம் தேதி சென்னையில் இருந்து மதுரைக்குக் கிளம்ப உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 18 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவும் பாலாவும் இணைய உள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
ராதே ஷ்யாம் படத்துல இத கவனிச்சீங்களா… பிரபாஸின் அப்பாவாக மறைந்த பிரபல தமிழ் நடிகர்!