www.garudavega.com

"என் மேல ஏன் இந்த கோவம் வெறிலாம் வருதுனு"... பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி வேதனை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் கொரோனா ஊரடங்கிற்கு முன்பே ஆரம்பித்த சீரியல் 'பாக்கியலட்சுமி'. கணவர் மற்றும் 3 வளர்ந்த பிள்ளைகள் உடன் ஒரு குடும்பத்தலைவி எப்படி ஒரு குடும்பத்தைச் சமாளிக்கிறார் என்பது பற்றிய கதைதான் பாக்கியலட்சுமி. எனவே குடும்ப தலைவிகள் பலருக்கும் இது பேவரைட் சீரியலாக மாறிப்போனது. அதுவும் முக்கியமாக குடும்பத்திற்காக உழைத்து உழைத்து ஒருகட்டத்தில் தனக்கென்று ஒரு தனி அடையாளம் இல்லை என்று நினைக்கும் பாக்கியலட்சுமி எப்படி தனக்கான அடையாளத்தை தேடிக் கொள்கிறார் என்பதுதான் கதையின் திருப்பம்.

Bakkiyalakshmi Gopi heart broken video பாக்கியலட்சுமி சீரியல் கோபி வேதனை

இதை பார்த்த பலரும் தங்களுக்கு இந்த சீரியல் ஒரு உந்துதலாக இருப்பதாகவும் பாசிட்டிவிட்டியை  உருவாக்குவதாகும் கமெண்ட் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பாக்கியலட்சுமி  கதாபாத்திரத்தில் நடிகை சுசித்ரா நடித்து வருகிறார். இந்நிலையில் அந்த சீரியலில் கடந்த சில வாரங்களாக இரண்டாவது மகன் எழில் தனது தந்தைக்கு இருக்கும் உறவை கண்டுபிடித்தது தான் சுவாரஸ்யமாக செல்கிறது. சமூக வலைதளங்களில் கூட இதைப் பற்றிய பதிவுகளை காண முடிந்தது. இந்நிலையில் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் சமீபத்தில் லைவ் வந்துள்ளார். இந்நிலையில் நடிகர் சதீஷ் இது பற்றி கூறும் பொழுது "கடந்த சில நாட்களாக புரோமோவை பார்த்துவிட்டு பலரும் எனது இன்பாக்ஸில் வந்து மிகவும் வக்கிரமான வார்த்தைகளால் என்னை திட்டுகிறார்கள். தயவுசெய்து கேட்கிறேன், அது ஒரு சீரியல் என்பதை மறக்க வேண்டாம். என்னிடம் வந்து. மோசமாக பேசுவது எப்படி நியாயமாகும் தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமீபத்தில் வைரலாகி வருகிறது.

"என் மேல ஏன் இந்த கோவம் வெறிலாம் வருதுனு"... பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபி வேதனை...! வீடியோ

மற்ற செய்திகள்

Bakkiyalakshmi Gopi heart broken video பாக்கியலட்சுமி சீரியல் கோபி வேதனை

People looking for online information on Bakkiyalakshmi, Gopi will find this news story useful.